‘தேங்க் யூ எம்எஸ்டி’ - முழங்காலில் ஐஸ்பேக் கட்டியிருந்த தோனி குறித்து நெகிழ்ந்த ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சிஎஸ்கே - கேகேஆர் ஆட்டம் முடிந்த பின் கேப்டன் தோனி முழங்காலில் ஐஸ்பேக் கட்டிக்கொண்டு ரசிகர்களை சந்தித்தார். இது தொடர்பான வீடியோவையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், ‘தேங்க் யூ தோனி’ என உணர்ச்சிபொங்க தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், ‘தோனி தனது முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அது அவரின் தொடர் செயல்பாட்டுக்கு இடையூறாக உள்ளது’ என கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், இந்த 9 போட்டிகளிலும் தோனி தவறாமல் கலந்துகொண்டார். எந்த ஆட்டத்தையும் அவர் தவறவிடவில்லை. முழங்கால் பிரச்சினை இருந்தபோதிலும், தோனி அனைத்து ஆட்டங்களிலும் விக்கெட் கீப்பிங் செய்துள்ளார்.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பின்பு இந்த சீசனில் சிஎஸ்கேவின் கடைசி ஹோம் ஆட்டத்தைக் காண அதிக எண்ணிக்கையில் வந்திருந்த உள்ளூர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தோனி உள்ளிட்ட வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது காயத்தால் அவதிப்படும் தோனியின் இடது முழங்காலில் ஐஸ்பேக் கட்டப்பட்டிருப்பதை கண்ட ரசிகர்கள் எமோஷனலாகி ட்விட்டரில் தங்களின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், “முழங்கால் வலியுடன் இன்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தோனிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

கிரிகெட்டர் என்ற ட்விட்டர் ஐடியில், “எம்எஸ் தோனி சேப்பாக்கம் முழுக்க முழுக்க முழங்கால் கேப்புடன் நன்றி தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசனும் இதையே பகிர்ந்துள்ளார்.

மற்றொருவர், “தேங்க்யூ தோனி” என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, சுனில் கவாஸ்கருக்கு அவர் ஆட்டோகிராஃப் வழங்கியிருப்பதை பலரும் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்