IPL 2023 | ஐபிஎல் பிளே ஆஃப் - கொல்கத்தா வெற்றியால் நெருக்கடி நிலையில் சிஎஸ்கே?

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேனின் அற்புதமான சுழற்பந்து வீச்சாலும், ரிங்கு சிங்குவின் பொறுப்பான பேட்டிங்காலும் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 6 விக்கெட்கள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜடேஜா 24 பந்துகளில், 20 ரன்கள் எடுத்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் (17), அஜிங்க்ய ரஹானே (16) ஆகியோர் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தனர். டேவன் கான்வே 28 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு (4), மொயின் அலி (1) ஆகியோரை ஒரே ஓவரில் வெளியேற்றினார் சுனில் நரேன். தோனி 3 பந்தில் 2 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணி தரப்பில் பந்து வீச்சில் சுனில் நரேன் 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். வருண் சக்ரவர்த்தி 36 ரன்களை வழங்கி 2 விக்கெட் கைப்பற்றினார். ஷர்துல் தாக்குர் 3 ஓவர்களை வீசி 15 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 145 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. ரஹ்மனுல்லா குர்பாஷ் (1), வெங்கடேஷ் ஐயர் (9), ஜேசன் ராய் (12) ஆகியோர் தீபக் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தனர். எனினும் கேப்டன் நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இருவரும் சிஎஸ்கே பந்து வீச்சை அருமையாக எதிர்கொண்டு அரை சதம் அடித்தனர். ரிங்கு சிங் 43 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் மொயின் அலியால் ரன் அவுட் செய்யப்பட்டார். அப்போது வெற்றிக்கு 18 பந்துகளில் 13 ரன்களே தேவையாக இருந்தன.

நிதிஷ் ராணா 44 பந்துகளில், 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களும், ஆந்த்ரே ரஸ்ஸல் 2 ரன்களும் சேர்க்க கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரிங்கு சிங் பெற்றார்.

கொல்கத்தா அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தற்போதைய வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேவேளையில் தனது 13-வது ஆட்டத்தில் 5-வது தோல்வியை சந்தித்த சிஎஸ்கே 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2வது இடத்தில் தொடர்கிறது. சிஎஸ்கே தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 20-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் டெல்லியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சிஎஸ்கே அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்