ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிரேரக் மன்கட், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹெய்ன்ரிச் கிளாசன் 29 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் அப்துல் சமத் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 36 ரன்களும் விளாசினர். லக்னோ அணி தரப்பில் கிருணல் பாண்டியா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை.கைல் மேயர்ஸ் 14 பந்துகளை சந்தித்து 2 ரன்னில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து களமிறங்கிய பிரேரக் மன்கட் மட்டையை சுழற்றினார். குயிண்டன் டி காக் 19 பந்தில் 29 ரன்கள் எடுத்தநிலையில் மயங்க் மார்க்கண்டே பந்தில் வெளியேறினார். 8.2 ஓவர்களில் 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்டாயினிஸ் களமிறங்கினார். அவர், பிரேரக் மன்கட்டுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார்.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 15 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள்எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 69 ரன்கள் தேவையாக இருந்தது. அபிஷேக் சர்மா வீசிய 16-வது ஓவரில் முதல் இரு பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஸ்டாயினிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். 25 பந்துகளை சந்தித்த ஸ்டாயினிஸ் 40 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், எஞ்சிய 3 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாச ஹைதராபாத் அணி அதிர்ச்சியில் உறைந்தது. ஏனெனில் இந்த ஓவரில் மட்டும் லக்னோ அணி 31 ரன்களை சேர்த்திருந்தது.
» பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிக்கும் முனைப்பில் சிஎஸ்கே - சேப்பாக்கத்தில் இன்று கொல்கத்தாவுடன் மோதல்
இதன் பின்னர் லக்னோ அணியின் வெற்றிஎளிதானது. நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் பிரேரக் மன்கட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்ட 14 ரன்கள் கிடைத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் விரட்டினார். நடராஜன் வீசிய அடுத்த ஓவரில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது.
ஃபசல்ஹக் ஃபரூக்கி வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தை நிக்கோலஸ் பூரன் பவுண்டரிக்கு விரட்ட 19.2 ஓவர்களில் லக்னோ அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரேரக் மன்கட் 45 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்களும் நிக்கோலஸ் பூரன் 13 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னோ அணிக்கு இது 6-வதுவெற்றியாக அமைந்தது. இதன்மூலம் அந்த அணி 13 புள்ளிகளுடன்பட்டியலில் 4-வது இடத்துக்குமுன்னேறியது. அந்த அணி சிஎஸ்கேவுக்கு எதிராகமோதிய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் லக்னோ அணி பிளே ஆஃப்சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதேவேளையில் ஹைதராபாத் அணி 7-வது தோல்வியை பதிவு செய்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago