இறுதிச்சுற்றில் விகாஸ், சஹானா

By செய்திப்பிரிவு

காமன்வெல்த் போட்டியில் இந்திய வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா, உயரம் தாண்டுதல் வீராங்கனை சாஹானா நாகராஜ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

காமன்வெல்த் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்தவரான கௌடா, தனது முதல் முயற்சியிலேயே 64.32 மீ. தூரம் வட்டு எறிந்ததன் மூலம் முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றை உறுதி செய்தார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கௌடாவின் “பெர்சனல் பெஸ்ட்” 66.28 மீ. ஆகும்.

மகளிர் நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சஹானா 1.81 மீ. உயரம் தாண்டி 7-வது இடத்தைப் பிடித்து தகுதிச்சுற்றை உறுதி செய்தார். அவருடைய பிரிவில் இடம்பெற்றிருந்த 6 பேரும், மற்றொரு பிரிவில் இடம்பெற்றிருந்த 4 பேரும் 1.85 மீ. உயரம் தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் மகளிர் நீளம் தாண்டுதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மயூகா ஜானி 6.11 மீ. தூரமே தாண்டினார். இதனால் அவரால் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE