புதுடெல்லி: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் வரும் ஜூன் 9 முதல் 18-ம் தேதி வரை புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறைமோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
கத்தாரில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கால்பந்து கோப்பை தொடருக்கு தயாராகும்விதமாகவே இந்திய அணி இன்டர்காண்டினென்டல் கோப்பையில் கலந்து கொள்கிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 9-ம் தேதி மங்கோலியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம்இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
இது இன்டர்காண்டினென்டல் கோப்பையின் மூன்றாவது பதிப்பாகும். இதற்கு முன்னர் 2018-ல்மும்பையிலும், 2019-ல் அகமதாபாத்திலும் இந்தத் தொடர் நடைபெற்றது. இம்முறை இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக வரும் 15-ம்தேதி முதல் பயிற்சியாளர் இகோர்ஸ்டிமாக் தலைமயில் புவனேஷ்வரில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் இந்திய அணி வீரர்கள்.
ஜூன் 12-ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - வனுவாட்டு அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 15-ம் தேதி லெபனான் அணியை சந்திக்கிறது இந்திய கால்பந்து அணி. இறுதிப் போட்டி 18-ம்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இன்டர்காண்டினென்டல் கோப்பை முடிவடைந்தவுடன் பெங்களூருவில் 21-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரை நடைபெற உள்ள தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago