ஜூன் 27-ல் ஆசிய கபடி போட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 27 முதல் 30-ம் தேதி வரை தென் கொரியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஜூன் 27 முதல் 30-ம் தேதி வரை தென் கொரியாவில் உள்ள பூசன் நகரில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். 6 வருடங்களுக்கு பிறகு இந்த தொடர் நடைபெற உள்ளது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற தொடரில் இந்திய அணியானது பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரானது 1980-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணி 7 முறை வாகை சூடி உள்ளது. ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான போட்டியிலும் இந்தியா வலுவாக உள்ளது. 2017-ம் ஆண்டு தொடரில் இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டியில், தென் கொரியாவை தோற்கடித்து மகுடம் சூடியிருந்தது. கடைசியாக நடைபெற்ற 5 தொடர்களில் இந்திய அணி 4 முறை தங்கம் வென்றுள்ளது. இம்முறை ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களான அஷன் குமார், இ.பாஸ்கரன், சஞ்ஜீவ் பாலியன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தேர்வு வரும் 17-ம் தேதி பிஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்