சென்னை: தோனி போன்ற லெஜண்ட் பின் வரிசையில் இருக்கும்போது எந்த வீரர் பேட்டிங் செய்ய வந்தாலும், தோனி களத்தில் பேட்டிங் செய்ய வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்கள் என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
168 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது .27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கேவுக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது.
போட்டி முடிந்த பிறகு ஜடேஜா பேசும்போது, “ சுழற்பந்து வீச்சாளாராக மைதானத்தில் என் பந்து திரும்பும்போது நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் சேப்பாக்கத்தில்தான் பயிற்சி செய்கிறோம்.அதனால் எது சரியான வேகம் என்பதை நாங்கள் அறிவோம். சேப்பாக்கத்தில் பிற அணிகள் விளையாடும்போது அவர்கள் மைதானத்தின் நுணுக்கங்களை உள்வாங்கிக் கொள்ள நேரம் தேவைப்படும். எங்களுக்கு சேப்பாக்கம் ஹோம் க்ரவுண்ட் என்பதால் நாங்கள் இதன் நன்மைகளை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம்.
» சிவசேனா வழக்கு | உத்தவ் தாக்கரேவை மீண்டும் முதல்வராக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» ரிஸ்கான ஷாட் ஆடுவதற்கு துபேவின் ஆட்டம் சிறந்த உதாரணம்: ஸ்டீபன் ஃபிளெமிங்
நாங்கள் இப்போட்டியில் ஒட்டு மொத்தமாக சிறப்பாக விளையாடினோம். ஒருவேளை நான் தோனிக்கு முன்னர் களம் இறங்கியிருந்தால் மைதானத்தில் அவர் பெயர்தான் சுற்றி ஒலிக்கும். ரசிகர்கள் நான் ஆட்டமிழப்பதற்காக காத்திருப்பார்கள். தோனி பின் வரிசையில் இருக்கும்போது ஒரு அணியின் மிடில் ஆர்டரில் நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். சிஎஸ்கே தனது சொந்த மைதானத்தில் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் லெஜண்ட் எம்எஸ் தோனியை பார்க்கவே பெரும் கூட்டம் வருகிறது.
எம்.எஸ். தோனிக்கு முன்னால் எந்த வீரர் பேட்டிங் செய்ய வந்தாலும், தோனி களத்தில் பேட்டிங் செய்ய வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்கள். அந்த வீரரின் வெளியேற்றத்திற்காக பிரார்த்தனை செய்வார்கள். எதுவாக இருப்பினும் அணி வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்.” என்றார்.
டெல்லியுடனான போட்டியில் ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். மேலும் 4 ஓவர் பந்து வீசிய ஜடேஜா 19 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 mins ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago