சிஎஸ்கேவுக்கு 7-வது வெற்றி: 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியின் எந்த பேட்ஸ்மேன்களும் 30 ரன்களை எட்டவில்லை. டேவன் கான்வே 10, ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஆட்டமிழந்தனர்.

மொயின் அலி 7, அஜிங்க்ய ரஹானே 21 ரன்களில் வெளியேறினர். ஷிவம் துபே 12 பந்துகளில், 3 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் விளாசிய நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அம்பதி ராயுடு 23, ரவீந்திர ஜடேஜா 21 ரன்களில் வெளியேறினர். தோனி 9 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் பந்தில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 3, அக்சர் படேல் 2 விக்கெட்களை வீழ்த்தினர். இறுதிக்கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடியதால் சிஎஸ்கே அணியால் வலுவான இலக்கை கொடுக்க முடிந்தது.

168 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது. டேவிட் வார்னர் 0, பில் சால்ட் 17, மிட்செல் மார்ஷ் 5, மணீஷ் பாண்டே 27, ரீலி ரோஸோவ் 35, அக்சர் படேல் 21, ரிபால் படேல் 10, லலித் யாதவ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். அமன் ஹக்கிம் கான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரனா 3, தீபக் சாஹர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஜடேஜா தேர்வானார்.

27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கேவுக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது. 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 15 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது. லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே மோதிய ஆட்டம் மழை காரணமாக ரத்தாகி இருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றை நெருங்கி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இது 7-வது தோல்வியாக அமைந்தது. 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றிகளை பெற்று 10 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் தொடர்கிறது. டெல்லி அணி எஞ்சியுள்ள தனது ஆட்டங்களில் மேற்கொண்டு ஒரு தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்