'அறுவை சிகிச்சை சக்சஸ்; விரைவில் களத்திற்கு திரும்புவேன்' - கே.எல்.ராகுல் உறுதி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலுக்கு வலது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

31 வயதான அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தி வந்தார். பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர் காயமடைந்தார். அதனால் ஐபிஎல் சீசனின் எஞ்சிய போட்டிகள் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகினார்.

“அனைவருக்கும் வணக்கம். எனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. மருத்துவர்களுக்கும், மருத்துவ குழுவினர்களுக்கும் நன்றி. விரைவில் தேசிய அணிக்கு திரும்பும் அந்த தருணத்தை எதிர்பார்த்துள்ளேன். மீண்டும் களத்திற்கு திரும்புவதில் உறுதியாக உள்ளேன்” என ராகுல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட கே.எல்.ராகுல் உடற்தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்