கொல்கத்தா: எங்கள் அணியின் சிறந்த ஃபினிஷராக மாறி வருகிறார் ரிங்கு சிங் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸ்ஸல் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசி வெற்றி பெற வைத்தார் ரிங்கு சிங்.
வெற்றிக்குப் பின்னர் ஆந்த்ரே ரஸ்ஸல் கூறியதாவது:
பஞ்சாபுக்கு எதிரான இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததால் பவுலர்கள், பந்தை கிரிப் செய்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். இதனால் எங்களால் எளிதாக சிக்ஸர்கள் அடிக்க முடிந்தது. மேலும், கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்றாலும் கூட அடிக்க முடியும் என்று உறுதியாக இருந்தோம். நான் அடித்த சில சிக்ஸர்கள் மிகவும் எளிதாகவே இருந்தன. அதனால் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறி விட்டேன்.
» கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் | வாக்குப்பதிவு விறுவிறுப்பு
» 16 மணி நேரத்தில் 6+ கோடி பார்வைகள் - 'ஆதிபுருஷ்' ட்ரெய்லர் சாதனை
இருப்பினும், இந்த ஆண்டு எங்களுக்கு புதிய ஃபினிஷராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார். நான் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட போது பந்தை ஒருவேளை தவறவிட்டால் ஒரு ரன் ஓடி வாருங்கள் என்று ரிங்கு சிங் என்னிடம் கூறினார்.
நம்பிக்கை
நானும் பந்தை அடிக்க நினைத்து தவறவிட்டதால் ஓடிவந்து ரன் அவுட் ஆகி விட்டேன். இருந்தாலும் நிச்சயம் கடைசி பந்தில் ரிங்கு சிங் போட்டியை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அதைப் போலவே அவர் செய்து முடித்தார். இந்த சீசனில் அவர் எங்கள் அணியின் சிறந்த ஃபினிஷராக இருந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago