IPL 2023: RCB vs MI | டு பிளெசிஸ், மேக்ஸ்வெல் ‘அதிரடி’ பாட்னர்ஷிப் - மும்பைக்கு 200 ரன்கள் இலக்கு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 199 ரன்களை குவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் ஆர்சிபியும், எம்ஐ அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணிந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

வழக்கமாக மும்பை அணிக்கு தொடக்கம் கொடுக்கும் ரோஹித் சர்மா முதல் ஓவரில் அவுட்டாகி வெளியேறுவார். தற்போது ஆர்சிபியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னுடன் முதல் ஓவரில் விக்கெட்டானார். அவரைத்தொடர்ந்து அனுஜ் ராவத் 6 ரன்களுடன் கிளம்பினார். அடுத்து வந்த ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் க்ளான் மேக்ஸ்வெல் இணை மும்பை பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். 12 ஓவர் வரை இந்த இணையை பிரிக்க முடியாமல் மும்பை திக்குமுக்காடியது. ஒருவழியாக போராடி 4 சிக்சர்களுடன் 33 பந்துகளில் 68 ரன்களை குவித்த மேக்வெல்லை ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அவுட்டாக்கினார். அடுத்து மஹிபால் லோமரோர் 1 ரன்னில் போல்டாக, டு பிளெசிஸூம் 65 ரன்களுடன் கிளம்பினார்.

17 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை சேர்த்திருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கும், கேதர் ஜாதவ்வும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தினேஷ் கார்த்திக் சிக்சர் விளாசி நம்பிக்கையூட்டினாலும் 30 ரன்களில் அவசரப்பட்டு கிளம்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி 199 ரன்களை குவித்துள்ளது.

மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோடன், குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE