மகளிர் வீராங்கனைகளின் திறனை கண்டறிய தேர்வு முகாம்: டிஎன்சிஏ சார்பில் மே 13 முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமானது (டிஎன்சிஏ), மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையில் திறமையான வீராங்கனைகளை கண்டறிவதற்காக ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இதில் சிறந்த முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளனர். இதற்காக தலா 4 உறுப்பினர்களைக் கொண்ட நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் 37 மாவட்டங்களிலும் சிறந்த வீராங்கனைகள் அடையாளம் காணப்பட உள்ளனர்.

நான்கு குழுக்களும் மே 13 மற்றும் 14-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்,நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி,மதுரை, தேனி, கரூர், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் வீராங்கனைகளை தேர்வு செய்ய உள்ளனர்.

தொடர்ந்து மே 17-ம் தேதி வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் 20, 21-ம் தேதிகளில் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுகிறது. இதில் 13 வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 22 ஆக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் வீராங்கனைகள் அந்தந்த மைதானங்களில் ஏற்பாடு செய்யப்படும் முகாமில் கலந்துகொள்வார்கள். பின்னர் பயிற்சியாளர்களின் உள்ளீடுகளின் அடிப்படையில் 9 மாதங்களுக்குப் பிறகு மாவட்டங்களுக்கு இடையேயான போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் இருந்து 20 முதல் 25 வீராங்கனைகள் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இவர்கள் தற்போதுள்ள 6 அணிகளுடன் (ஃப்ரேயர் கோப்பை) இணைக்கப்படுவார்கள். இந்த ஆண்டு ஃப்ரேயர் தொடரை ஒரு நாள் போட்டி, டி 20 வடிவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தவாறு 6முதல் 8 அணிகளை உருவாக்க இறுதி வீராங்கனைகள் உருவாக்கப்படுவார்கள் என டிஎன்சிஏ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்