பென் ஸ்டோக்ஸ் 6 விக்.; த்ரில் முதல்நாள் ஆட்டம்: மே.இ.தீவுகள் 123 ரன்களுக்குச் சுருண்டது

By ஆர்.முத்துக்குமார்

லார்ட்ஸில் தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் 123 ரன்களுக்குச் சுருண்டது, பென் ஸ்டோக்ஸ் தன் வாழ்நாளின் சிறந்தப் பந்து வீச்சில் 22 ரன்களுக்க்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஒரே நாளில் 14 விக்கெட்டுகள் விழுந்தன, இங்கிலாந்தும் முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு லார்ட்ஸ் முதல் நாளில் 13 விக்கெட்டுகளுக்கு மேல் விழுந்துள்ளது .பென் ஸ்டோக்ஸ் 15 ஓவர்களை தொடர்ச்சியாக வீசி 22 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியும் 24/4 என்று தடுமாறியது, அதன் பிறகு ஸ்டோக்ஸ், மலான் மேலும் சரிவு ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். டாஸ் வென்ற ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது நல்ல முடிவாகத்தான் முதலில் தெரிந்தது. அலிஸ்டர் குக் தொடர்ச்சியாக ஸ்லிப்பில் 3-வது கேட்சைக் கோட்டை விட்டது நிகழ்ந்தது. இம்முறை ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் கிரெய்க் பிராத்வெய்ட் தப்பித்தார். ஆனால் 10 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பிராத்வெய்ட் எட்ஜைப் பிடித்தார். பேட்டின் விளிம்பை பந்து முத்தமிட்டுச் சென்றது.

பிறகு மழைகாரணமாக 30 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்க, மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது 11 பந்துகள் ஆடி எண்ணிக்கையைத் தொடங்க முடியாத கைல் ஹோப்பையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் வெளியேற்றினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணி மே.இ.தீவுகளின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது, இதில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் அடங்கும். இடையில் கடந்த டெஸ்ட் நாயகன் ஷாய் ஹோப் 29 ரன்களையும் கிரன் போவல் 39 ரன்களையும் எடுத்தனர்.

கடைசியில் ரோலண்ட்-ஜோன்ஸ், ஷாய் ஹோப்பை வீழ்த்தினார், ஸ்லிப்பில் குக் ஒரு வழியாகக் கேட்ச் எடுத்தார். இதிலிருந்து சரிவு தொடங்கியது. 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது மே.இ.தீவுகள். ஹோப் வெளியேறிய 4 பந்துகள் கழித்து பென் ஸ்டோக்ஸ் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து பொவெல் வெளியேறினார். பவுலர்களுக்கு பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆனது. அபாய வீரர் ஜெர்மைன் பிளாக்வுட் ஒரு பெரிய ட்ரைவுக்குச் சென்று ரோலாண்ட் ஜோன்ஸிடம் பவுல்டு ஆனார்.

அதன் பிறகு பென் ஸ்டோக்ஸ் 3 பந்துகளில் ராஸ்டன் சேஸ் (18), ஷேன் டவ்ரிச் (1) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். தேநீர் இடைவேளை முடிந்த் ஜேசன் ஹோல்டர் (9) தன் சக வீரர்களுடன் பெவிலியனில் இணைந்தார். ஸ்டோக்ஸ் வீசிய மிகப்பெரிய இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார் ஹோல்டர். பிறகு கிமார் ரோச் (0), ஷனன் கேப்ரியல் (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி பென் ஸ்டோக்ஸ் லார்ட்ஸ் மதிப்பிற்குரிய பவுலர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

இங்கிலாந்து மோசமாகத் தொடங்கியது. மார்க் ஸ்டோன்மேன் 1 ரன்னில் கிமார் ரோச் பந்தை டவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குக்கும் இதே வழியில் 10 ரன்களுக்கு அவுட் ஆகி ஸ்டோன்மேனுடன் பெவிலியனுக்குத் திரும்பினார். கடும் விமர்சனத்துக்குள்ளான வெஸ்ட்லி (8) ஹோல்டர் பந்தில் எல்.பி. ஆகி வெளியேறினார். ஆனால் அடுத்த பந்தே இங்கிலாந்தின் முதுகெலும்பை முறியடிக்கும் விக்கெட்டைக் கைப்பற்றினார் ஹோல்டர், ஜோ ரூட்டை 1 ரன்னில் வீழ்த்தினார் ஹோல்டர். 24/4 என்ற நிலையிலிருந்து 46/4 என்று ஸ்டோக்ஸ், மலான் கொண்டு சென்றனர்.

ஆட்ட முடிவில் ஸ்டோக்ஸ் 13 ரன்களுடனும் மலான் 13 ரன்களுடனும் நாட் அவுட்டாக இருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்