சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை கவுன்ட்டர்கள் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
2 கவுன்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. ரூ.2,000, ரூ.2,500 விலைக்கான டிக்கெட்டுகள் கவுன்ட்டரிலும், பேடிஎம், www.insider.in ஆகிய இணையதளங்களில் ஆன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.3,000, ரூ.5,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்படும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago