முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆட்டம் ஆரம்பம்

By பெ.மாரிமுத்து

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணத்தை வெற்றி கரமாக 9-0 (3 டெஸ்ட், 5 ஒருநாள போட்டி, ஒரு டி20) என்ற கணக்கில் வென்ற உற்சாகத்துடன் இந்தத் தொடரை சந்திக்கிறது. அதேவேளையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் அவ்வளவு எளிதாக இருக்காது என்பதையும் கோலி நன்கு அறிந்திருப்பார். ஏனெனில் அந்த அணியும் சமபலம் வாய்ந்ததாக திகழ்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசல்வுட் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு மாற்றாக இடம் பெற்றுள்ள நாதன் கவுல்டர் நைல், பேட் கம்மின்ஸ் ஆகியோரும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர் ஆகியோரும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

தொடக்க வீரரான ஷிகர் தவண் விளையாடாததால், ரோஹித் சர்மாவுடன் அஜிங்க்ய ரஹானே களமிறங்கக்கூடும். உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு கே.எல்.ராகுலை தொடர்ந்து 4-வது இடத்தில் களமிறக்கும் முடிவை அணி நிர்வாகம் மேற்கொள்ளக்கூடும். மிடில் ஆர்டரில் தோனி, மணீஷ் பாண்டே ஆகியோரும் அதிரடியில் மிரட்ட கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் தயாராக உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கும் தொடக்க வீரர் பிரச்சினை எழுந்துள்ளது. காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக ஆரோன் பின்ச் களமிறங்கமாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டேவிட் வார்னருடன், டிரெவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி தற்போதுதான் ஒருநாள் போட்டித் தொடரை எதிர்கொள்கிறது. வங்கதேச அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்த நெருக்கடியான நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை சந்திக்கிறது ஆஸ்திரேலியா. மிடில் ஆர்டரில் ஸ்மித்துடன் அதிரடி வீரர்களாக கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பயிற்சி ஆட்டத்தில் வார்னர், ஸ்மித், டிரெவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர். இதில் மார்கஸ் ஸ்டோனிஸ் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரிடம் இருந்து இன்று சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். மேலும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர் 4 கேட்ச்களை கோட்டை விட்டிருந்தனர். இதனால் பீல்டிங்கில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்த முயற்சிக்கும்.

அந்த அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரின் வாயிலாக இந்திய ஆடுகளங்களை அறிந்து வைத்திருப்பது இம்முறை ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமான விஷயமாக கருதப்படுகிறது. இதனால் உச்சக்கட்ட பார்மில் உள்ள இந்திய அணிக்கு எதிரான இந்தத் தொடர் கடும் சவால்கள் நிறைந்ததாகவே காணப்படும்.

அணிகள் விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிரெவிஸ் ஹெட், ஹில்டன் கார்ட்ரைட், ஆரோன் பின்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸம்பா, ஆஷ்டன் அகர், நாதன் கவுல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பாக்னர், கேன் ரிச்சர்ட்சன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்