ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம் - பேட்டிங்கில் பாபர் அசாம் புதிய சாதனை!

By ஆர்.முத்துக்குமார்

கராச்சியில் நடைபெற்ற பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி தொடரை 4-0 என்று கைப்பற்றியதோடு, ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியது.

கேப்டன் பாபர அசாம் மிக அருமையாக ஆடி 107 ரன்களை எடுக்க, பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி அருமையாகவே விரட்டியது. ஆனால் உஸாமா மிர் (4/43), முகமது வாசிம் (3/40) ஆகியோர் பந்து வீச்சில் மடிந்து 184/3 என்ற வலுவான நிலையிலிருந்து அடுத்த 48 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து படுதோல்வி கண்டனர்.

பாபர் அசாம் தன் 18வது ஒருநாள் சர்வதேச சதத்தை எடுத்தார். அவருடன் ஆகா சல்மான் 58 ரன்களை 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் விளாசினார். பாபர் அசாம் ஒப்பிடுகையில் டெஸ்ட் போட்டி ரக இன்னிங்ஸ்தான் 117 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 107 ரன்களை எடுக்க பாகிஸ்தான் 334 ரன்களைக் குவித்தது.

விரட்டலின்போது பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி மற்றும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் அதிவேகமாகவும் துல்லியமாகவும் வீசினர். ஆனால் நியூஸிலாந்து தரப்பில் மேட்சை காலி செய்தது டேரில் மிட்செல், கேப்டன் டாம் லேதம் கூட்டணிதான், இருவரும் சேர்ந்து 83 ரன்களை 17 ஓவர்களில் சேர்த்து ஆமை வேகத்தில் ஆடியதால் நியூஸிலாந்தின் வாய்ப்புகள் தட்டிப்பறிக்கப்பட்டு விட்டன.

இவர்கள் இருவரும் ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாக ரன்ரேட்டை பராமரிக்க தேவைப்படும் ரன் விகிதம் ஒரு கட்டத்தில் 8.50 என்று உயர்ந்தது. அப்போதுதான் லெக் பிரேக் பவுலர் உசாமா மிர் புகுந்தார், டேரில் மிட்செல் அறுவையான இன்னிங்ஸை முடித்தார்.

ஆனால், டாம் லேதமுக்கும் மார்க் சாப்மேனுக்கும் இடையிலான பார்ட்னர்ஷிப் 7 ஓவர்களில் 55 ரன்கள் என்று மிளிர்ந்தது. மார்க் சாப்மேன், பாகிஸ்தான் பவுலர்கள் இப்திகாரையும் ஆகா சல்மானையும் காலி செய்தார், 3 ஓவர்களில் 34 ரன்களை விளாசி 33 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 46 ரன்களை எடுத்த போது மீண்டும் லெக் பிரேக் பவுலர் உசாமா மிர் மிடில் ஸ்டம்பைக் கழற்ற நியூஸிலாந்தின் வெற்றிக்கனவு நொறுங்கியது. டாம் லேதம் 76 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார், ஆனால் ஷாஹின் அஃப்ரீடி மீண்டும் பந்து வீச வந்தபோது அவுட் ஆனார். இதன் பிறகு நியூஸிலாந்து இன்னிங்ஸ் உடைந்து நொறுங்கியது. உசாமா மிர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முன்னதாக, பாபர் அசாம் தன் 18-வது ஒருநாள் சதத்தை எடுத்ததோடு 5,000 ஒருநாள் ரன்களை விரைவில் எடுத்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் 113 புள்ளிகளுடன் ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகளும் புள்ளிகளும் வருமாறு:

2) ஆஸ்திரேலியா - 113
3) இந்தியா - 113
4) இங்கிலாந்து - 111
5) நியூஸிலாந்து - 107
6) தென் ஆப்பிரிக்கா -106.
7) பங்களாதேஷ் - 95
8) இலங்கை - 86
9) மே.இ.தீவுகள் - 72
10) ஆப்கானிஸ்தான் - 71

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்