சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை

By பெ.மாரிமுத்து

சென்னை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், 4 முறை சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது.

சிஎஸ்கே அணி 10 ஆட்டங்களில் விளையாடி 11 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக லக்னோ அணிக்கு எதிரான மோதிய ஆட்டம் மழை காரணமாக ரத்தாகி இருந்தது. அதற்கு முன்னதாக 2 ஆட்டங்களில் சிஎஸ்கே தோல்வி கண்டிருந்தது. இந்த 3 ஆட்டங்களின் வழியாக ஒரு புள்ளியை மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே இன்றைய ஆட்டத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

கடந்த மாதம் 30-ம் தேதி சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கடைசி பந்தில் வெற்றியை இழந்திருந்தது. தற்போது இந்த சீசனில் சொந்த மண்ணில் 2-வது முறையாக பிற்பகலில் நடைபெற உள்ளஆட்டத்தில் மோத உள்ளது. 414 ரன்கள் வேட்டையாடி உள்ள டேவன் கான்வே, 354 ரன்கள் சேர்த்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும்.

மிடில் ஆர்டரில் அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர். லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அம்பதி ராயுடு, மொயின் அலி ஆகியோர் பேட்டிங்கில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். தோனி இறுதி ஓவரில் களமிறங்கி சிக்ஸர்களை விளாசுவது அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்வதற்கு வழிவகை செய்கிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் அணிகள் 2வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 8ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது சிஎஸ்கே. இந்த ஆட்டத்தில் அஜிங்க்ய ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இதனால் மீண்டும் ஒரு முறை அவர், மும்பை பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பந்து வீச்சில் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ளது ஊக்கம் அளிக்கக்கூடும். இருப்பினும் 17 விக்கெட்கள் கைப்பற்றி உள்ள துஷார் தேஷ்பாண்டே ஓவருக்கு சராசரியாக 12.11 ரன்களை வாரி வழங்குவது அணியின் திட்டங்களை பலவீனப்படுத்துவதாக உள்ளது. .

சுழற்பந்து வீச்சில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக தீக்சனா, மொயின் அலி உள்ளனர். இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாதனது சீரான வேகத்தால் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசனை மந்தமாக தொடங்கினாலும் சரியான நேரத்தில் உத்வேகம் பெற்றுள்ளது. கடந்த இரு ஆட்டங்களிலும் மும்பை அணி 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக எட்டியிருந்தது. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பேட்டிங்கை வலுவடையச் செய்துள்ளது. டிம் டேவிட், திலக்வர்மா ஆகியோர் ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் அதிரடியாக விளையாடும் திறனை பெற்றிருப்பது கூடுதல் பலமாக உள்ளது.

இவர்கள் 4 பேரும் சிஎஸ்கேவின் பந்து வீச்சுதுறைக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். இருப்பினும் கேப்டன் ரோஹித் சர்மாவின் பார்ம்இந்த சீசனில் கவலை அளிக்கும் விதத்திலேயே உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான கட்டத்தில் மும்பை அணி உள்ளதால் ரோஹித் சர்மா பொறுப்புடன் செயல்படுவதில் தீவிரம் காட்டக்கூடும்.

மும்பை அணியின் பந்து வீச்சு இந்த சீசனில் இதுவரை பலம் பெறவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் உள்ள போதிலும் அவரது பந்து வீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லா, சேப்பாக்கம் ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

டெல்லி - பெங்களூரு மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

4 வருடங்களுக்குப் பிறகு: சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸை 4 வருடங்களுக்குப் பிறகு எதிர்கொள்கிறது சிஎஸ்கே அணி. கடைசியாக 2019ம் ஆண்டு தொடரில் இரு அணிகளும் சேப்பாக்கத்தில் மோதி இருந்தன. அந்த சீசனில் லீக் சுற்று மற்றும் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று என இரு முறை சிஎஸ்கேவை வென்றிருந்தது மும்பை இந்தியன்ஸ்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்