கோலி vs கம்பீர் | வாக்குவாதத்தில் பேசியது இதுதான்: சம்பவத்தை நேரில் பார்த்தவர் பகிர்ந்த தகவல்

By செய்திப்பிரிவு

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது.

கிரிக்கெட் உலகில் இது விவாதப் பொருள் ஆனது. சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள சூழலில் இரு தரப்பும் சமூக வலைதளத்தில் பதிவுகள் மூலம் மோதல் போக்கை தொடர்கின்றன. இந்த சூழலில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கம்பீர்: ஆமாம், நீங்கள் என்ன சொன்னீர்கள்?
கோலி: நான் உங்களிடம் எதுவும் சொல்லவில்லையே? அப்படி இருக்க இதில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்?
கம்பீர்: நீங்கள் என் அணி வீரரை தவறாக பேசி உள்ளீர்கள். அது எனது குடும்பத்தை தவறாக பேசியதற்கு சமம்.
கோலி: அப்போது உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
கம்பீர்: அதை நான் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமா?

இப்படியாக கோலி மற்றும் கம்பீர் இடையிலான வாக்குவாதம் நீண்டுள்ளது. அவர்களது செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் போது லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் கோலி வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். அது அப்படியே ஆட்டம் முடிந்ததும் தொடர்ந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE