பஞ்சாப்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும் பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் 3 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பையின் கேப்டன் ரோஹித் சர்மா ரன் எடுக்காமல் டக்அவுட்டானார்.
இஷான் கிஷன், கேமரூன் கிரீன் பாட்னர்ஷிப் அமைத்தனர். இதில் கேமரூன் கிரீன் 23 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் இணைந்து பஞ்சாப் பவுலர்களின் பந்துகளை விளாசினார். 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்தவரை, நாதன் எலிஸ் வெளியேற்றினார். நிலைத்து ஆடிய இஷான் கிஷனும் 75 ரன்களில் பெவிலியன் திரும்ப 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது மும்பை.
14 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் டிம் டேவிட், திலக் வர்மா களத்தில் இருந்தனர். இறுதியில் ஃபினிஷிங் ஷாட்டை சிக்சராக அடித்து வெற்றியை பதிவு செய்தார் திலக் வர்மா. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வெற்றிகொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் நாதன் எலிஸ் 2 விக்கெட்டையும் தவான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago