“நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நானல்ல!’’ - ஐபிஎல் கடைசி சீசன் குறித்து தோனி

By செய்திப்பிரிவு

“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை எப்படி என்ஜாய் செய்கிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த தோனி, “இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள். நானில்லை” என்று சொல்லி சிரித்தார். உடனே டேனி மோரிசன் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை நோக்கி, “2024-ல் தோனி மீண்டும் விளையாடுவார்” என சத்தத்துடன் கூற ஆராவாரம் எழுந்தது. ரசிகர்கள் மத்தியில் இந்த சீசனே தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்ற தகவல் பரவி வந்தது. இதற்கு விடை தெரியாத நிலையில் தற்போது தோனியே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்