மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 42-வது லீக் போட்டியில் 213 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி, வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை. சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் என இருவரும் தங்கள் அதிரடியால் மும்பைக்கு இந்த வெற்றியை தேடி தந்துள்ளனர். இந்தப் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு தொடக்கமே சறுக்கல்தான். கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேமரூன் க்ரீன், இஷான் கிஷன் உடன் இணைந்து 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். கிஷன், 28 ரன்களில் விக்கெட்டை இழந்தார். க்ரீன், 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா கூட்டு சேர்ந்தனர். இருவரும் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அந்த கூட்டணி மும்பை அணிக்கு அவசியமான ஒன்றாக அமைந்தது. 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் அவுட் ஆனார். அவரை ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்றி இருந்தார்.
15.4 ஓவர்களில் 152 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பேட் செய்ய வந்தார் டிம் டேவிட். 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் சிக்ஸர் விளாசி அசத்தினார். ஹோல்டர் அந்த ஓவரை வீசி இருந்தார். மறுமுனையில் திலக் வர்மா, 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 1000-மாவது போட்டியாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago