சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிஎஸ்கேவின் இன்னிங்ஸை தொடங்கிய ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 9 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்ட இந்த காம்போவை சிக்கந்தர் ராசா பிரிந்தார். அதன்படி 37 ரன்களுடன் ருதுராஜ் வெளியேறினார்.
டெவோன் கான்வே நிலைத்து நின்று ஆட ஷிவம் தூபே 28 ரன்களில் நடையைக்கட்டினார். மொயின் அலி 10 ரன்களில் விக்கெட்டாக 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 169 சேர்த்திருந்தது. ஜடேஜா 12 ரன்களில் விக்கெட்டாக வந்து சேர்ந்தார் தோனி. 4 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 200 ரன்களை குவித்துள்ளது. தோனி 13 ரன்களுடனும், டெவோன் கான்வே 92 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங், சாம்கரன், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago