ராவல்பிண்டி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் 500-வது வெற்றியாக இது அமைந்தது.
ராவல்பிண்டியில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் 113 ரன்களும் வில் யங் 86 ரன்களும் சேர்த்தனர்.
289 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஹர் ஸமான் 114 பந்துகளில், 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 117 ரன்கள் விளாசினார்.
இந்த வெற்றியானது பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிடைத்த 500-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி இதுவரை 949 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. 500 வெற்றிகளை எட்டிய 3-வது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த வகையில் ஆஸ்திரேலியா 594 வெற்றிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 539 வெற்றிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
32 mins ago
விளையாட்டு
37 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago