மும்பை: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஃபிட்டாக இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள மும்பை அணிக்கு பவுலிங் தான் சங்கடம் கொடுத்து வருகிறது. நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித், 181 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 25.86 என உள்ளது.
“மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர் இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாட மீண்டும் வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையான ஒன்று” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago