அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்களை குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 35-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாஹா தொடக்கத்திலேயே 4 ரன்களுடன் கிளம்பினார். சுப்மன் கில் விளாச அவருக்கு ஹர்திக் பாண்ட்யா துணை நின்றார். ஹர்திக் பாண்ட்யாவை பியூஷ் சாவ்லா வெளியேற்ற, தமிழக வீரர் விஜய் சங்கர் களத்துக்கு வந்த சேர்ந்தார்.
34 பந்துகளில் 56 ரன்களைச் சேர்த்த சுப்மன் கில் அவுட்டாக அடுத்த ஓவரில் விஜய் சங்கரும் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 13 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்த குஜராத் 103 ரன்களைச் சேர்த்திருந்தது. அடுத்து பாட்னர்ஷிப் அமைத்த அபினவ் மனோகர், டேவிட் மில்லர் மும்பை பந்துகளை வானத்தை நோக்கி பறக்கவிட்டனர். 3 சிக்சர்களை விளாசிய அபினவ் மனோகர் 42 ரன்களில் விக்கெட்டானார்.
சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் 46 ரன்களைச் சேர்த்துவிட்டு கிளம்ப, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. ராகுல் தெவாட்டியா 20 ரன்களுடனும், ரஷித் கான் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், அர்ஜுன் டென்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago