மும்பை: எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
கிரிக்கெட் உலகில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் கவனம் பெற்று வரும் சூழலில் அடுத்தடுத்து இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் அணி என்ற அந்தஸ்தை இதன் மூலம் இந்திய அணி பெறுகிறது. கடந்த முறை நியூஸிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அணி விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்.
» செயல்பாட்டிற்கு வந்தது சென்னை விமான நிலைய புதிய முனையம்: டாக்காவுக்கு முதல் விமானம் இயக்கம்
» 12 மணி நேர வேலை அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: கமல்
15 வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்த அணியில் ரஹானே சுமார் ஓராண்டுக்கு பிறகு அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 19-ம் தேதி ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago