கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பல ஆக்ஷன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு அவை த்ரோ என்று முத்திரைக் குத்தப்பட்டு பிறகு ஐசிசி பயிற்சி மையத்தில் ஆக்ஷன் சரி செய்யப்படுவதை நாம் பார்க்கின்றோம். இப்போது தனியார் டி20 கிரிக்கெட் போட்டிகளின் சந்தை மதிப்பு மற்றும் வணிக எழுச்சி காரணமாக கிரிக்கெட்டின் அடிப்படை விதிமுறைகளும் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய் விடும் என தெரிகிறது. அந்த வகையில் ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடும் இலங்கையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா வீசுவது உண்மையில் பவுலிங் என்ற வகையினத்துக்குள் வருமா என்று நிபுணர்கள் விளக்க வேண்டும்.
உடனே மலிங்கா வீசினாரே என்று பேசக்கூடாது. ஏனெனில் மலிங்காவின் ஆக்ஷ்னில் அவர் கையை வலது புறமாக படுக்கை வசமாக வைத்து வீசினாலும் கை ஒரு கட்டத்தில் தோள்பட்டைக்குச் சமமாகவோ அல்லது சற்றே உயரமாகவும் வருகின்றது. அதே போல் பிடல் எட்வர்ட்ஸ் என்ற மேற்கிந்திய தீவுகள் பவுலரை எடுத்துக் கொண்டால் ரவுண்ட் ஆர்ம் ஆக்ஷனில் ஒரு கட்டத்தில் வீசும் முன் கை தோள்பட்டைக்கும் மேல் நேராக வருகின்றது.
இது போன்ற ஆக்ஷனில் பல பேர் இருந்திருக்கலாம் என்றாலும் நமக்கு தெரிந்தவரையில் ஆஸ்திரேலியாவின் வேகப்புயல் ஜெஃப் தாம்சன் ஒரு வித்தியாசமான ஆக்ஷன் கொண்டவர்தான். ஆனால், அவரது பந்து வீச்சு ஆக்ஷனை ஸ்லோ மோஷனில் பார்த்தோமானால் வீசும் போது கை தோள்பட்டைக்கு மேல் ஸ்ட்ரெயிட் ஆக வருகின்றது. அவரும் ரவுண்ட் ஆர்ம் ஆக்ஷன் தான்.
ஆனால் மதீஷா பதிரானா பவுலிங் ஆக்ஷனைக் கூர்ந்து கவனித்தால், அவர் பந்து வீசும் வலது கை வீசும் முன் ஒரு கணம் கூட தோள்பட்டைக்கு மேல் லேசாகக் கூட வரவில்லை, இடுப்பிலிருந்து பந்தை எடுத்து வீசுவது போல் ஒரு ஆக்ஷன், அது பந்து வீச்சு என்பதற்குரிய விதிமுறைகளின் கீழ் அமைந்துள்ளதா என்பது ஆய்வுக்குரியது. ஐசிசி விதிமுறைகளின் படி, வீசும் கை தோள்பட்டைக்கு மேல் ஸ்ட்ரெயிட் ஆக வரவேண்டும் என்பதே விதியின் கீழ் வரும் அதிகாரப்பூர்வமான பவுலிங்கிற்கான விளக்கமாக உள்ளது. கையை உயர்த்தாமலேயே தாழ்வாக இடுப்பளவில் தன் வலது கையை அப்படியே விட்டு எறிவது போல் இருக்கின்றது பதிரானாவின் ஆக்ஷன்.
» ஏற்றத்துடன் தொடங்கி சற்றே தடுமாறும் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வு
» “எனக்கு பிரியாவிடை கொடுக்க முன்வந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி” - தோனி
கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்தி வீசும் போது கடைசி நேரத்தில் முட்டியை மடக்குகின்றனர். அதுதான் த்ரோ என்பது மட்டுமே விளக்கம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. முட்டியை 15 டிகிரிக்கும் மேல் மடக்கி வீசக்க்கூடாது என்று இப்போது விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையையே பாகிஸ்தானின் ஹாரிஸ் ராவுஃப், ஹஸ்னைன் போன்றோர் தெளிவாக த்ரோ வீசுவது போல்தான் இருக்கின்றது. ஆனால் இவர்கள் விதிமுறைகளையும் தாண்டி முட்டியை மடக்கி வீசும் பவுலர்கள்.
பதிரானா விவகாரம் வேறு, இவர் கை தோள்பட்டைக்கு மேல் ஸ்ட்ரெயிட் ஆக வருவதே இல்லை. தோள்பட்டைக்கே வருவதில்லை. சைட் ஆர்ம் ஆக்ஷன் என்றால் இடுப்பிலிருந்து பந்தை எடுத்து அப்படியே விட்டு எறிவது விதிமுறைகளுக்கு உட்பட்டதுதானா என்பதை ஐசிசி நிபுணர்கள் விளக்க வேண்டும். வீசும் கை தோள்பட்டைக்கு மேல் வர வேண்டும் என்பது பவுலிங்கின் முதல் அடிப்படை விதியாகும். அந்த விதியை பதிரானா ஆக்ஷன் நிறைவேற்றுகிறதா என்பது ஆய்வுக்குரியதே.
தனியார் கிரிக்கெட்டில் பொதுவாக அடிப்படை விதிமுறைகளையே மாற்றி அமைக்கின்றனர். ஆனால், பந்து வீச்சு பந்து வீச்சாக இருக்க வேண்டும், பேட்டிங் பேட்டிங்காக இருக்க வேண்டும் என்பது கட்டாயமான அடிப்படை. இந்த அடிப்படையை மாற்ற முடியாது. ஏனெனில் இந்த கட்டாய விதியின் கீழ்தான் கிரிக்கெட் ஆடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பதிரானா பவுலிங் ஆக்ஷன் சோதித்தலுக்குரியதே.
பிரெட் லீ ஆக்ஷன் முட்டியை மடக்குவதில் விதிமீறுவதாக இந்திய மூத்த நடுவர் ஒருவர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முரளிதரனின் ஆக்ஷன் விசித்திரத்தை புரிந்து கொள்ளாமல் அவரை தடை செய்து சோதனைக்குட்படுத்தினர். சயீத் அஜ்மல் என்பவரின் பவுலிங்கையே மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி அவரை கிட்டத்தட்ட காலியே செய்து விட்டனர். பந்து வீச்சு திருத்தப்படுவதற்கு முன் அவரை யாராலும் தன்னம்பிக்கையுடன் ஆட முடியவில்லை. பந்து வீச்சை திருத்திய பிறகு வருவோர் போவோர் எல்லாம் சாத்தி எடுத்தனர்.
வளரும் பவுலரான பதிரானாவின் ஆக்ஷனை இப்போதே சோதித்து, ஆய்வுக்குட்படுத்தினால் அவரது எதிர்காலம் சிறப்பாக அமையும். இப்போது விட்டு விட்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்து விக்கெட்டுகள் எடுக்கும் போது அவரை ஆய்வுக்குட்படுத்துவது சரியாக இருக்காது. இப்போதே அவரது ஆக்ஷனில் உள்ள கோளாறுகளை திருத்தி அமைப்பதுதான் நல்லது என்கின்றனர் கிரிக்கெட் விவரம் அறிந்த சிலர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago