IPL 2023 | புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்

By செய்திப்பிரிவு

ஐபிஎல் 16வது சீசன் பரபரப்பாக நடந்துவருகிறது. நேற்று இரண்டு ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 7 ரன்களில் வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 49 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

நடப்பு தொடரில் சிஎஸ்கே பெறும் 5வது வெற்றி இதுவாகும். இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 7 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேநேரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் முறையே 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. எனினும் ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் இரண்டாமிடமும், லக்னோ மூன்றாமிடத்திலும் உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இதேபோல், 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று ஆர்சிபியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புள்ளி பட்டியலில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE