கொல்கத்தாவுடன் ஈடன்கார்டனில் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே அணி!

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதுகிறது.

நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்த சீசனை பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய நிலையில் அடுத்த இரு ஆட்டங்களில் பெங்களூரு, குஜராத் அணிகளை வீழ்த்தியது. ஆனால் அதன் பின்னர் ஹைதராபாத், மும்பை, டெல்லி அணிகளிடம் தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியின் ஹாட்ரிக் தோல்விக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்படாதது பிரதான காரணமாக அமைந்தது.

லீக் சுற்று ஆட்டங்கள் பாதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் கொல்கத்தா அணி விளையாடும் லெவனில் உள்ள வீரர்களை மாற்றுவதற்காக பதிலாக சிக்கல்களை தீர்க்க வேண்டிய நேரம் இது. கடந்த ஆட்டத்தில் குர்பாஸ் ரஹ்மனுல்லாவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஜேசன் ராய் 39 பந்துகளில் 43 ரன்களே சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் விக்கெட் கீப்பிங்கில் இரு முறை ஸ்டெம்பிங் செய்யும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். அநேகமாக இன்றைய ஆட்டத்தில் லிட்டன் தாஸுக்கு பதிலாக தமிழகத்தின் நாராயண் ஜெகதீசன் சேர்க்கப்படக்கூடும்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு பார்முக்கு திரும்பி இருந்தார். இதனால் சிஎஸ்கே பந்து வீச்சளார்களுக்கு ரஸ்ஸல் அழுத்தம் கொடுக்கக்கூடும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 36 ரன்களை விட்டுக்கொடுத்து தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிய சுனில் நரேன் வலுவாக மீண்டு வருவதில் கவனம் செலுத்தக்கூடும்.

தோனி தலைமையிலான சிஎஸ்கே 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. கொல்கத்தாவில் சிஎஸ்கே அணிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளதால் இன்றைய ஆட்டத்துக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் ஆட்டத்துக்கு ஆட்டம் தங்களது திறனை மேம்படுத்திக் கொண்டே வருவது பலம் சேர்க்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தோனியின் தலைமைப் பண்பு, போட்டியின் போது அவர் காக்கும் அமைதி, தெளிவான உள்ளூணர்வு அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்கிறது. தொடக்க பேட்டிங்கில் டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஹைதராபாத்துக்கு எதிராக 77 ரன்கள் விளாசிய டேவன் கான்வேயிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். அவரும், ஷிவம் துபேவும் கொல்கத்தா அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான சுனில் நரேன், வருண் சக்ரவர்த்தி கூட்டணிக்கு சவால் கொடுக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்சனா, மதீஷா பதிரனா ஆகியோர் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்