“பேட்ஸ்மென்களுக்கே ஒருநாள் கிரிக்கெட் மேலதிக சாதகமாக உள்ளது” - சச்சின் விமர்சனம்

By ஆர்.முத்துக்குமார்

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மிக அதிகமாக பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கின்றது, பவுலர்கள் வெறுமனே பேட்டர்கள் அடிப்பதற்கான மெஷின் பவுலர்கள் ஆகிவிட்டனர் என்ற தொனியில் சச்சின் டெண்டுல்கர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இரு முனைகளிலும் இரண்டு புதிய பந்துகள் என்பதையும் கூடுதல் பீல்டராக 5-வது பீல்டரை சர்க்கிளுக்குள் கொண்டு வருவதையும் நீக்கி விட்டால் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங், பவுலிங் இரண்டிற்கும் இடையே சமநிலையைப் பேண முடியும் என்கிறார் சச்சின் டெண்டுல்கர். தனது 50-வது பிறந்த தினத்தை ஒட்டி சச்சின், செய்தியாளர்களிடம் பேசியபோது, “மூன்று வடிவங்களும் வெவ்வேறானவை. இதில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டை கொஞ்சம் கூர்ந்து கவனித்து சில மாற்றங்களை செய்ய வேண்டும். பந்துக்கும் பேட்டுக்கும் சமநிலை இல்லை. பேட்டர்கள் பக்கம் ஒருதலைபட்சமாக சாதகப் பலன்கள் இருக்கின்றன.

இரு முனைகளிலும் 2 புதிய பந்துகள் மூலம் வீசப்படுவதால் 25-வது ஓவர் ஆகும்போது கூட பந்துகள் 12-13 ஓவர்களே ஆனதாக பளபளப்பு தேயாமல் இருப்பதால் ரிவர்ஸ் ஸ்விங் என்பது ஒருநாள் கிரிக்கெட்டின் பொய்யாய்ப் பழங்கதையாகிவிட்டது. அதேபோல் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளும் பறிக்கப்பட்டு விட்டன. ஏனெனில், பந்து கலர் மாறுவதில்லை, கடினத்தன்மையும் குறைவதில்லை. இதனால் பவுலர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகின்றது. பந்து கலர் கொஞ்சம் மங்கினால் பேட்டர்களுக்குக் கஷ்டமாக இருக்கும். சவாலாக இருக்கும். இந்தச் சவாலை ஏற்படுத்த வேண்டும். பவுலர்களுக்கு, குறிப்பாக ஸ்பின் பவுலர்களுக்கு ஏதாவது ஒரு சாதகம் இருக்க வேண்டும்.

அதேபோல் கள வியூக கட்டுப்பாடுகளும் பேட்டர்களுக்குச் சாதகமாக உள்ளது. 5 பீல்டர்கள் சர்க்கிளுக்குள் இருக்க வேண்டும் என்பது ஸ்பின் பவுலிங்கை அழித்து விடுகிறது. நான் ஸ்பின் பவுலர்கள் பலரிடம் இது தொடர்பாகப் பேசினேன். 5 பீல்டர்கள் சர்க்கிளுக்குள் இருப்பதால் நாங்கள் லைனை மாற்ற முடிவதில்லை என்கின்றனர். ஆஃப் ஸ்பின்னர் வீசுகிறார் என்றால் மிடில் ஸ்டம்ப் லைனில்தான் வீச வேண்டியுள்ளது. ஏனெனில், டீப் பாயின்ட்டை நிறுத்தினால், லாங் ஆஃபை சர்க்கிளுக்குள் கொண்டு வர வேண்டியிருக்கின்றது. ஆன் சைடில் 3 பீல்டர்கள் டீப்பில் அவசியம் தேவை. ஆனால், ஆஃப் திசையில் ஒரு பீல்டரைத்தான் டீப்பில் நிறுத்த முடியும்.

ஆஃப் ஸ்பின் என்றாலே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்து பந்தை உள்ளே திருப்பி அவரை கவர் ட்ரைவ் ஆடச்செய்து ஏமாற்றி பவுல்டு ஆக்குவதுதான். இப்போது இது காலியாகிவிட்டது, காரணம் விதிமுறைகள். அதேபோல் நான் ஏற்கெனவே கூறியதுபோல் மழை, பனிப்பொழிவு உள்ளிட்ட சாதகமற்ற அம்சங்கள் இரு அணிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அதற்காக ஒருநாள் கிரிக்கெட்டை 25 ஓவர்கள் கொண்ட இரண்டு இன்னிங்ஸ்களாக மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன்.

இன்னொன்று, ஒரு காசைச் சுண்டி விட்டதன் மூலம் ஒரு போட்டியின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும் நிலைக்கும் மாறுதல் வேண்டும். ஒரு காயின் வேலையைக் காட்டி விடுகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியாக இல்லாமல் டாஸ் தீர்மானம் செய்கின்றது. டாஸ் ஜெயிப்பதானாலேயே ஒரு அணிக்கு சாதகம் ஆவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? எனவே, டாஸ் வெற்றி - தோல்வியைத் தீர்மானிப்பதை தவிர்க்க 25 ஓவர் மாடலை பரிசீலிக்க வேண்டும்” என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்