“இப்போது பாதுகாப்பு பிரச்சினை இல்லை; பாகிஸ்தானில் ஏன் இந்தியா விளையாடக் கூடாது?” - பிசிபி கேள்வி

By ஆர்.முத்துக்குமார்

ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில் நடைபெறவிருப்பதால் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் நடுநிலை மைதானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்றலாமே என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜீம் சேத்தி பரிந்துரை செய்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானில் சென்று விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது. கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது. அதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கலந்து கொள்ளும்போது, இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக நஜீம் சேத்தி நம்பிக்கை தெரிவித்தார்.

“பனி மெல்ல மெல்ல உருகும் என்று எங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பனி உருகினால் 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறும்போது இந்திய அணி இங்கு வந்து விளையாடும் என்று நம்புகிறோம். அதுவரை ஆசியக் கோப்பைக்கான இந்தியப் போட்டிகளை நடுநிலை மைதானங்களில் நடத்தவும், 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா சென்று ஆடவும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறிய நஜீம் சேத்தி, அவர்களுக்கு அறிவுறுத்தியவர் பெயரைக் குறிப்பிடவில்லை.

“எங்கள் அரசு இந்தியாவுடன் விளையாடுவதற்கு எந்தவித தடையையும் போடவில்லை. ஆனால், இப்போதைக்கு பொதுவெளியில் நிலவும் கருத்து என்னவெனில், எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் நிதி ரீதியாக எங்கள் சொந்தக் காலில் நிற்க முடியும். ஆகவே இந்தியாவுடன் மாண்புடன் கிரிக்கெட்டை மட்டும் ஆட விரும்புகிறோம் என்பதாக உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றோம்.

ஆசியக் கோப்பைக்கான இந்தியப் போட்டிகளை நாங்கள் நடுநிலை மைதானங்களில் நடத்த முடிவெடுப்பதுபோல் இந்தியாவும் உலகக் கோப்பை போட்டிகளின்போது பாகிஸ்தான் போட்டிகளை நடுநிலை மைதானங்களுக்கு மாற்ற வேண்டும், இந்த ‘ஹைபிரிட்’ மாடலை இந்தியாவும் கடைப்பிடிக்கலாமே. எங்கள் நிலைப்பாடு என்னவெனில், எல்லாம் ஒருதலைபட்சமாக ஒரு நாட்டு சார்பாக செல்லக் கூடாது என்பதே. கடந்த காலங்களில் இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் இருந்தது, ஆம், அது உண்மையே. ஆனால் இப்போது இல்லை. இப்போது பாகிஸ்தானில் விளையாடாமல் இருப்பதற்கு இந்தியாவின் சாக்குப் போக்கு என்ன?” என்கிறார் நஜீம் சேத்தி.

ஆசிய கிர்க்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த ஹைபிரிட் மாடல் கோரிக்கைக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. பாகிஸ்தானில் நடத்தினால்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்