மும்பை: 16வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 28 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.
தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும்.
ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாடும் லீக் சுற்று முடிவில் இதில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டியின் அட்டவணையை அறிவித்துள்ளது பிசிசிஐ.
அதன்படி, பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி மே 23 முதல் மே 28 வரை சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 23-ம் தேதி முதல் தகுதிச் சுற்றுப் போட்டி மற்றும் மே 24-ம் தேதி எலிமினேட்டர் போட்டி இரண்டும் சென்னையில் நடைபெறவுள்ளது.
அதேபோல், மே 26ம் தேதி 2-வது தகுதிச் சுற்று போட்டி, மே 28ம் தேதி இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago