சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.
சிஎஸ்கே அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.கடைசியாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. அதேவேளையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 5 ஆட்டங்களில், 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 10 அணிகள் பங்கேற்றுள்ள தொடரில் 9-வது இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் மும்பை அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.
சிஎஸ்கே அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும். கால் விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் 3 ஆட்டங்களில் விளையாடாமல் இருந்தார். தற்போது உடல் தகுதியை எட்டி உள்ள அவர், கடந்த இரு தினங்களாக வலை பயிற்சியில் தீவிரமாக கலந்துகொண்டார். அவர், களமிறங்கும் பட்சத்தில் சிஎஸ்கேவின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும்.
இந்த சீசனில் பேட்டிங்கில் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே டாப் ஆர்டரில் தேவையான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஷிவம் துபே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சில இன்னிங்ஸ்களை விளையாடி உள்ளார். அஜிங்க்ய ரஹானேவிடம் இருந்து வெளிப்பட்டுள்ள அதிரடி ஆட்டமும் பலம் சேர்க்கிறது. மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து பெரிய அளவில் மட்டை வீச்சு வெளிப்படவில்லை. அவர்களும் பார்முக்கு திரும்பினால் பெரிய அளவிலான இலக்கை கொடுப்பதும், அடைவதும் சாத்தியமாகும்.
சேப்பாக்கத்தில் கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டிருந்தது சிஎஸ்கே அணி. இதற்கு 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையிலான காலக்கட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் பேட்டிங்கில் அதிக அளவிலான பந்துகளை வீணடித்தது முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இந்த விஷயத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் சிஎஸ்கே வீரர்களிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படவில்லை. மேலும் பீல்டிங்கும் சராசரிக்கும் குறைந்த அளவில் காணப்படுகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டனர். இந்த விஷயங்களிலும் சிஎஸ்கே கூடுதல் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். பெங்களூரு அணிக்கு எதிராக கடைசி ஓவரை சிறப்பாக வீசியிருந்த இலங்கையின் மதீஷா பதிரனாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இதேபோன்று ஆட்டத்துக்கு ஆட்டம் முன்னேற்றம் கண்டு வரும் துஷார் தேஷ்பாண்டேவும் கவனிக்கத்தக்க வீரராக இருக்கக்கூடும்.
சுழற்பந்து வீச்சில் தனது முதல் ஆட்டத்தில் கவனத்தை ஈர்க்க தவறிய தீக்சனா, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் கிளென் மேக்ஸ்வெலை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருடன் மொயின் அலி, ஜடேஜா ஆகியோரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். சிஸ்கே அணி ஹைதராபாத்துக்கு எதிராக மோதிய கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது. இந்த எண்ணிக்கையை இன்றைய ஆட்டத்தில் அதிகரிக்கச் செய்வதில் சிஎஸ்கே முனைப்பு காட்டக்கூடும்.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் சீரான திறனை வெளிப்படுத்தாததும் பவர்பிளேவில் விக்கெட்களை விரைவாக பறிகொடுப்பதும் பலவீனமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு சவால் கொடுக்க வேண்டுமானால் கேப்டன் எய்டன் மார்க்ரமுடன் மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஹாரி புரூக் முதல் 3 ஆட்டங்களில் சிறப்பாக செயல்படாத நிலையில் 4வது ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி சதம் அடித்திருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் ஹாரி புரூக், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவருக்கு சிஎஸ்கேவின் சுழல் கூட்டணி அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago