IPL 2023: DC vs KKR | வார்னர் மீண்டும் பொறுப்பான ஆட்டம் - போராடி முதல் வெற்றி பெற்ற டெல்லி

By செய்திப்பிரிவு

டெல்லி: கொல்கத்தா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

128 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு இம்முறையும் பிரித்வி ஷா பவர் பிளே ஓவர்களுக்குள் தனது விக்கெட்டுகளை பறிகொடுத்தார். 13 ரன்கள் எடுத்திருந்த அவரை வருண் சக்கரவர்த்தி முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். பிரித்வி ஷா, நடப்பு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும். இதன்பின் வந்த மிட்சல் மார்ஷ் மற்றும் பிலிப் சால்ட் முறையே 2 மற்றும் 5 ரன்களில் வெளியேறினர்.

எனினும், வார்னர் சிறப்பாக விளையாடினார். மொத்தம் 11 பவுண்டரிகளை விளாசிய வார்னர் 57 ரன்கள் சேர்த்திருந்தபோது வருண் சக்கரவத்தில் பந்தில் அவுட் ஆனார். மனிஷ் பாண்டே வழக்கம் போல் மெதுவாக விளையாடி 23 பந்துகளுக்கு 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் அக்சர் படேல் பொறுப்புடன் விளையாட டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பெற்ற இந்த வெற்றிதான் நடப்பு ஐபிஎல் தொடரில் ருசிக்கும் முதல் வெற்றி ஆகும்.

கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் ராணா, அங்குள் ராய் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

கொல்கத்தா இன்னிங்ஸ்: டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணிக்க, அதன்படி முதலில் களமிறங்கியது.

ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் ஓப்பனிங் செய்தனர். 2 ஓவர்கள் கூட இந்த இணை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டை எடுத்து கேகேஆரின் சரிவை தொடங்கிவைத்தார் முகேஷ் குமார். வெங்கேடஷ் ஐயர் விக்கெட்டை நார்ட்ஜே வீழ்த்தினார். நிதீஷ் ராணாவை இஷாந்த் சர்மா கவனித்துக்கொள்ள, மந்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார் அக்சர் படேல்.

இதனால் 50 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது கேகேஆர். தொடர்ந்து ரிங்கு சிங், சுனில் நரைன் மற்றும் அங்குள் ராய் போன்றோரை சொற்ப ரன்களில் ஆட்டமிக்க செய்து டெல்லி பவுலர்கள் கெத்துகாட்டினர். கொல்கத்தா தரப்பில் ஓப்பனிங் இறங்கிய ஜேசன் ராய் 43 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, 16 ஓவர்களில் எல்லாம் கேகேஆர் 9 விக்கெட்டை இழந்திருந்தது.

எனினும் கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே ரஸ்ஸல் அந்த அணிக்காக போராடினார். ஆனால் அவரையும் பெரிய ஷாட்கள் ஆடவிடாமல் டெல்லி பவுலர்கள் சோதித்தனர். இறுதி ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அதிரடி காண்பித்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா. இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த ரஸ்ஸல் 38 ரன்கள் எடுத்தார்.

டெல்லி தரப்பில் இஷாந்த் சர்மா, நார்ஜே, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்