முட்டுக்கொடுக்கும் நீரோட்டத்தில் ஐக்கியமாகிறார்! - சேவாக், நீங்களுமா இப்படி?

By ஆர்.முத்துக்குமார்

கே.எல்.ராகுலின் வீழ்ச்சியடைந்த பேட்டிங்கை பலரும் விமர்சிக்க, மேலும் சிலர் முட்டுக்கொடுத்து பேசி வருகின்றனர். ஆனால், அந்த முட்டுக்கொடுக்கும் பட்டியலில் முன்னாள் அதிரடி மன்னர், அதிரடியாக விமர்சனக் கருத்துக்களை முன்வைக்கும் விரேந்திர சேவாகும் இணைந்திருப்பதுதான் ஆச்சரியம். ராகுலின் மந்தமான பேட்டிங்கை விதந்தோதுதல் (பாராட்டுவது) அவரது சொந்த அபிப்ராயம் என்றாலும் ராகுலை பரிதாப வீரர் சஞ்சு சாம்சனுடன் ஒப்பிட்டு, சஞ்சுவை ஒப்பிடும்போது ராகுல் மிகவும் சிறந்த வீரர் என்று தவறான உட்கோளுடைய ஒப்பீட்டையும் சேவாக் போன்ற ஒருவர் செய்வது ஆச்சரியத்தையும் தாண்டிய புதிரே!

கே.எல்.ராகுல் சமீபகாலமாக பேட்டிங் மறந்தது போல் ஆடி வருகின்றார், டி20-யில் சர்வசாதாரணமாக அவருக்கு மெய்டன் ஓவர்களை வீசுகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் நேரடியாகவே ராகுலில் பேட்டிங்கை விமர்சித்து, “ராகுல் பேட்டிங்கைப் பார்ப்பது போன்ற சலிப்பான விஷயம் வேறு இல்லை” என்று கூற ரவிசாஸ்திரி உள்ளிட்டோரும் விமர்சித்துள்ளனர்.

ஆனால் விரேந்திர சேவாக், ராகுலுக்கு முட்டுக்கொடுக்கும் பணியை செவ்வனே செய்திருந்தால் நமக்கு பிரச்சனையில்லை, அது அவரது கருத்து என்று விட்டு விடலாம். ஆனால் இந்திய அணியில் வாய்ப்பை நினைத்தால் வழங்குவதும் நினைத்தால் அணியை விட்டுத் தூக்குவதும் வேண்டுமென்றால் எடுப்பது, எடுத்து விட்டு லெவனில் வாய்ப்பு கொடுக்காமலும் பலவிதமாக ஊறுகாய் போல் பயன்படுத்தப்படும் சஞ்சு சாம்சனை ஒப்பிட்டு, சாம்சனை விட ராகுல் பேட்டிங் பரவாயில்லை என்று சேவாக் கூறியிருப்பது பிசிசிஐ அணித் தேர்வு, மற்றும் சலுகை வட்டத்தில் நுழைய விரும்பும் நீரோட்டத்தில் இணைவதன் அறிகுறியே அன்றி கிரிக்கெட் சம்பந்தமுள்ளதாக பார்க்க முடியவில்லை.

“இந்திய அணியில் உங்கள் இடத்தை நிறுவ வேண்டும் என்றால் அதற்கு கே.எல்.ராகுல் தான் சிறந்தவர், சஞ்சு சாம்சன் அல்ல, சஞ்சு சாம்சனை விட ராகுல் மேலானவர் . ராகுல் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், பல நாடுகளிலும் (?!) சதம் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராகவும் மிடில் ஆர்டரிலும் கூட நன்றாக ஆடியுள்ளார் (?!), டி20 கிரிக்கெட்டிலும் ரன்கள் அடிக்கின்றார். ராகுல் பார்முக்குத் திரும்பி விட்டார். ஸ்ட்ரைக் ரேட் விருப்பமுடையதாக இல்லை என்றாலும் அவரது பார்ம் ஒரு நல்ல அறிகுறி” என்கிறார் சேவாக்.

சேவாக் முட்டுக்கொடுப்பதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது என்பதை ராகுலின் புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரிந்து விடப்போகின்றது, "தென் ஆப்பிரிக்காவில் செஞ்சூரியனில் 123 ரன்களை அடித்த பிறகு டெஸ்ட்களில் ராகுலின் ஸ்கோர் இதோ: 23, 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1. எங்கே சதம், எங்கே அரைசதத்தைக் கூட காணோம்?

ஒருநாள் போட்டிகளில் கடைசியாக சதம் எடுத்தது 2021ம் ஆண்டு இங்கிலாந்து இங்கு வந்து அடிய ஒருநாள் தொடரில் புனேயில் அடித்தது, அதுவும் 114 பந்துகளில் 108 என்று பிளேடைப் போட இந்திய அணியின் டோட்டல் 336 ரன்களையும் தாண்டி 350-360 ரன்களுக்குச் சென்றிருக்க வேண்டியது. கடைசியில் இங்கிலாந்து 43.3 ஓவர்களில் இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இவரது டவுனில் இறங்கிய பென் ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் விளாசினார், ஆனால் ராகுல் 114 பந்துகளில் வெறும் 108 மட்டுமே. அதுவும் மேட்ச் இந்தியா தோல்வி.

அதன் பிறகு 2022-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் தொடக்க வீரராக இறங்கி அதுவும் கேப்டனாக 79 பந்துகளில் 55 ரன்களை எடுத்து பிளேடு போட இந்தியா 287/6 என்று முடிய தென் ஆப்பிர்க்கா 288/3 என்று வெற்றி பெற்றது. அதன் பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அகமதாபாத்தில் 48 பந்துகளில் 49 ரன்களை எடுத்தார், இதுவும் திருப்திகரமான இன்னிங்ஸ் அல்ல, இந்தியா பிறகு வெஸ்ட் இண்டீஸை கூட வீழ்த்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? வீழ்த்தியது. அதன் பிறகு ஜிம்பாப்வேயில் 1, 30 என்று சொதப்பல்.

அதன் பிறகு பங்களாதேஷில் மிர்ப்பூர் ஒருநாள் போட்டியில் நடுக்கள வீரராக இறங்கி 70 பந்துகளில் 73 ரன்களை எடுத்தார், இவர்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆனால் டீம் என்ன ஆனது 186 ரன்களை மட்டுமே எடுக்க வங்கதேசம் வென்றது, இந்த இன்னிங்ஸுக்குப் பிறகு 14, 8, 39 ஆகியவையே ராகுலின் ஸ்கோர். பிறகு எடுத்த 2 அரைசதங்கள் அறுவையின் உச்சம், இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டன்சில் 103 பந்துகளில் 64. வான்கடேயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 75 ரன்களை 91 ரன்கள் எடுத்து வெற்றி பெறச் செய்தார். இந்த இன்னிங்ஸ் ஒன்றுதான் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் ஆகும். அதன் பிறகு 9 ரன்கள், சென்னையில் 50 பந்துகளில் 32 என்று காலை வாரிவிட இந்தியா தோற்றது ஆஸ்திரேலியா தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

சேவாக் எதை வைத்து ராகுல் ஒருநாள் போட்டிகளில் ஓப்பனிங்கிலும் நன்றாக ஆடினார், மிடில் ஆர்டரிலும் நன்றாக ஆடினார் என்று கூறுகிறார் என்பது புரியவில்லை, ஆக புள்ளி விவரங்கள் தெரியாமல் முட்டுக்கொடுக்கும் வரிசையில் போய் நின்று விட்டார் சேவாக். டி20 சர்வதேச போட்டியில் வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற தொசுக்கு அணிகளுக்கு எதிராக இரண்டு அரைசதம் மற்றபடி அவரது ஸ்கோர் டி20 உலகக்கோப்பையின் போது, 4, 9, 9, 5. என்ன டி20 யிலும் கிழித்து விட்டார்? சேவாக் சார் என்ன இது?

வாய்ப்புகளுக்கு மேல் வாய்ப்பு கொடுக்கப்படும் ராகுலின் சொதப்பல் எங்கே, வாய்ப்பே எப்போதாவது பெயருக்கு கொடுக்கப்படும் சஞ்சு சாம்சன் எங்கே? ஏன் சஞ்சு சாம்சனை மட்டம் தட்ட தேர்வு செய்கிறீர்கள்? புரிகிறது சேவாக்..!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்