ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஆகின்றது ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு என்கிறது புள்ளி விவரங்கள். அங்கு ஆடுகளத்தின் தரம் எப்படி இருக்கும்?
அதுதான் நேற்று ராஜஸ்தான் தோல்விக்குக் காரணம் என்றாலும். 155 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 9 ஓவர்களில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து அதுவும் ஆல் அவுட் ஆகாமல் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தோல்வி கண்டது, ஒரு வேளை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உரித்தான ‘உஷ் கண்டுக்காதீங்க’ ரக போட்டியோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது.
என்ன இருந்தாலும் ஐபிஎல் தொடருக்கு கடந்த வருடம்தான் லக்னோ அணியின் என்ட்ரி இருந்தது. பெரிய முதலீட்டில் அணியை உருவாக்கியுள்ளனர். அந்த அணி குறைந்தது பிளே ஆஃப் வரைக்கும் வருவதுதானே சரியாக இருக்கும் என்ற கணக்கீடு இருக்குமோ என்னவோ? சிஎஸ்கேவும் மும்பையும் ஐபிஎல் தொடரின் எப்போதுமான செல்லப்பிள்ளைகள், குஜராத்தும், லக்னோவும் புதிதாக வந்துள்ள செல்லப்பிள்ளைகள். ஆகவே மற்ற அணிகள் இவர்களுக்கு வழிவிடத்தானே வேண்டும்?
முதல் கேள்வி பிட்ச் ஏன் இப்படிப் போடப்பட்டது? இரண்டாவது கேள்வி 1400 நாட்களுக்கும் மேல் அதாவது 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஐபிஎல் போட்டியை இங்கு நடத்த வேண்டிய அவசியம் என்ன? மூன்றாவது கேள்வி பிசிசிஐ-யிடம் என்ன நிதி வசதி இல்லையா? நல்ல பிட்ச்களைத் தயார் செய்ய நிதி இல்லையா? நான்காவது கேள்வி, கிரிக்கெட்டையும் அழித்து, வீரர்களின் தன்னம்பிக்கையையும் அழிக்கும் இத்தகைய டி20 பிட்ச்களினால் என்ன பயன்?
» 'ரியான் பராக் ஃபார்மில் இல்லை; வீரர்களை தொடர்ந்து ஆதரிப்போம்' - சங்ககாரா
» ஏமனில் கூட்டநெரிசலில் சிக்கி 85 பேர் பலி: உதவி பெறப்போன இடத்தில் பறிபோன உயிர்கள்
ராகுலுக்கு மூன்று லைஃப் - நம்ப முடிகிறதா?
லக்னோவும் 10 ஓவர்களில் 82 ரன்கள் விளாசி விட்டு பிறகு அடுத்த 10 ஓவர்களில் 72 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. மேலும் நிகோலஸ் பூரனின் ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 200 ஆக இருக்கும் போது ஒவ்வொரு போட்டியிலும் ஏன் அவர் 15-20 பந்துகளையே சந்திக்குமாறு இறக்கிவிடப்பட்ட வேண்டும்? கே.எல்.ராகுல் இன்னிங்ஸ் செம தடவல் என்றுதான் கூற வேண்டும். ஆனால், சேவாக் போன்றவர்களே இவர் சஞ்சு சாம்சனை விட பெட்டர் என்று முட்டுக் கொடுக்கிறார்கள். ராகுல் எடுத்த 39 ரன்களிலும் மூன்று லைஃப், ஒன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால் விட்ட கேட்ச், இன்னொன்று அவரே விட்ட நல்ல ரன் அவுட் வாய்ப்பு ஸ்டம்பில் அடித்திருந்தால் ராகுல் ஒரு யார்டு பின்னால் இருந்த காரணத்தால் ரன் அவுட் ஆகியிருப்பார்.
அடுத்த ஓவரில் ட்ரெண்ட் போல்ட் பந்தை ராகுல் கொடியேற்ற ஜேசன் ஹோல்டர் எளிதான கேட்சை கோட்டை விட்டது புரியாத புதிர். ஐபிஎல் லாஜிக். ஆனால், அப்படியுமே 9 ஓவர்களில் 74 ரன்களுக்கு நோ லாஸிலிருந்து அடுத்த 9 ஓவர்களில் 55 ரன்களையே எடுத்தது லக்னோ. நிகோலஸ் பூரனை இறக்காமல் ஆயுஷ் பதோனியை இறக்கியதும் தோல்வி கண்டது. இவர் ட்ரெண்ட் போல்ட்டை ஸ்கூப் ஆட முயல்கிறார்.. என்னவென்று சொல்வது இந்த ஷாட் செலக்ஷனை?
155 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது ஜாஸ் பட்லர் அத்தனை ஸ்லோவாக ஆடியது ஏன் என்ற கேள்வியும் துருத்திக் கொண்டு நிற்கிறது. ‘பட்லர்னா அடி, அடின்னா பட்லர்’. ஆனால் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்திற்கும் குறைவாகவே பட்லர் ரன் எடுத்திருந்தார். 41 பந்துகளில் 40 ரன்கள் என்பது பட்லர் ரக இன்னிங்ஸ் அல்ல. நான் தோற்கட்டுமா, நீ தோற்கிறாயா என்ற தோற்பதற்கான போட்டியின் லாஜிக்தான் என்று புரிகின்றது.
சஞ்சு சாம்சன் அரக்கப்பரக்க ஓடி ரன் அவுட் ஆனதும், பட்லர் கடைசியில் தூக்கி கையில் கொடுத்துவிட்டுப் போனதும், ஷிம்ரன் ஹெட்மையரும் குஜராத் அணிக்கு எதிராக ஃபைட் செய்தது போல் செய்யாமல் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்துச் சென்றதும். ரியான் பராக், தேவ்தத் படிக்கல் அறுவைகளைப் போட்டதும் ராஜஸ்தான் தோல்விக்குக் காரணமாயின. ஆனால் பிட்சின் படுமோசமான தன்மையைப் பயன்படுத்தி ஸ்டாய்னிஸும், ஆவேஷ் கானும் அரைக்குழியில் குத்திக் குத்தி எழும்பாத பந்துகளை வீசியதும் ராஜஸ்தான் வீழ்ச்சிக்குக் காரணம்.
மொத்தத்தில் சிஎஸ்கே, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகளுடன் 6 புள்ளிகளிலிருந்த லக்னோ அணி இந்த வெற்றியினால் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago