புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி இந்த சீசனில் இதுவரை உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள அந்த அணி புள்ளிகள் பட்டியலில் கணக்கை தொடங்காமல் கடைசி இடத்தில் உள்ளது. அதேவேளையில் கொல்கத்தா அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடம் வகிக்கிறது.
டெல்லி அணியின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் பலம் இல்லாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது. கடந்த சீசன்களில் சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா, இம்முறை 5 ஆட்டங்களில் 34 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர் அதிக பந்துகளை எதிர்கொண்டாலும் பெரிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் அவர், பந்துகளுக்கு நிகராக ரன்களை சேர்ப்பது அணியின் பேட்டிங்கை பலவீனப்படுத்துவதாக உள்ளது. மேலும் மிட்செல் மார்ஷும் எதிர்பார்த்த அளவிலான திறனை வெளிப்படுத்தவில்லை.
இது ஒருபுறம் இருக்க பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக பிரித்வி ஷாவுக்கு பதிலாக சர்பராஸ் கான் தொடக்க வீரராக களமிறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மிட்செல் மார்ஷ் இடத்தில் ரீலி ரோஸோவ் அல்லது ரோவ்மன் பாவல் களமிறக்கப்படக்கூடும்.
ஜேசன் ராய்..
» பாரதி கொள்ளுப்பேரனுக்கு `மகாகவி பாரதியார் விருது' கிடைக்குமா? - தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
கொல்கத்தா அணி தனது கடைசி ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை அணுகுகிறது. இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரஹ்மனுல்லா குர்பாஸுக்கு பதிலாக ஜேசன் ராய் களமிறங்கக்கூடும்.
இதனால் என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பர் பணியை மேற்கொள்வார் என தெரிகிறது. பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். நிதிஷ் ராணா, ரிங்கு சிங் ஆகியோரும் டெல்லி பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் தரக்கூடும். 5 ஆட்டங்களில் வெறும் 60 ரன்களை மட்டுமே சேர்த்துள்ள ஆந்த்ரே ரஸ்ஸல் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago