சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ல் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் கோட் போட்டுக் கொண்டு, நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டிருக்கும் போஸ் அனைவருக்கும் நினைவு இருக்கும். அதே பாணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியும் போஸ் கொடுத்திருப்பார். அது குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது.
“இதில் ஒப்பீடு எதுவும் இல்லை. ஒரு சிறந்த மனிதரின் சிறந்த போஸை காப்பி செய்ய முயன்றேன். அவ்வளவுதான். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஏனெனில் அவரை போல யோசிப்பதும், செயல்படுவதும் மிகவும் கடினமானது. இருந்தாலும் அவரது போஸை ஆவது முயன்று பார்க்கலாம் என செய்ததுதான்” என தோனி தெரிவித்துள்ளார்.
உங்களைப் போல யோசிப்பதும் மிகவும் கடினம் என்ற கேள்விக்கு, ‘களத்தில் வேண்டுமானால் இருக்கலாம்’ என தோனி மிகவும் எளிமையாக பதில் சொல்லி உள்ளார்.
தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சென்னை அணி, ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது இந்தப் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
» பத்து நண்பர்கள் - பாடல் - அழ. வள்ளியப்பா
» விருதுநகர் மருத்துவமனையில் இரு கைதிகளை வெட்டிய கும்பலைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைப்பு
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago