“இத்தனை ஆண்டுகள் சர்வைவ் ஆனதில் மகிழ்ச்சி” - கேப்டனாக 200வது போட்டி குறித்து நெகிழ்ந்த தோனி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் சீசனுக்கான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேசிங் செய்துவருகிறது. சிஎஸ்கே-வை கேப்டனாக தோனி வழிநடத்தும் 200-வது போட்டி இது.

இதை முன்னிட்டு, மைதானத்தில் என்.சீனிவாசன் முன்னிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தோனியைக் கௌரவித்தது.

இதனைத் தொடர்ந்து டாஸ் போட சென்றார் தோனி. டாஸைத் தொகுத்து வழங்கிய ரவிசாஸ்திரி, "வணக்கம் சென்னை. இன்னைக்கு மேட்ச் தெறிக்கப் போகுது" எனத் தமிழில் பேசினார். கேப்டனாக 200-வது போட்டியில் தோனிதான் டாஸை வென்றார். முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த அவரிடம், கேப்டனாக தனது 200வது போட்டி குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு, "பழைய மைதானத்தில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். அப்போது மிகவும் வெப்பமாகவும், ஈரப்பதமாகவும் இருக்கும். தற்போது புது மைதானத்தில் விளையாடும்போது சுவிட்சர்லாந்தில் விளையாடுவதை போல் உணர்கிறேன். மைதானத்தில் ரசிகர்களின் கூட்டத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு டி20 போட்டிகள் விளையாடப்பட்ட விதத்துக்கும், இப்போது விளையாடப்படும் விதமும் முற்றிலும் வேறாக உள்ளது. தொடர்ச்சியாக மாறுதலாகிவரும் இந்த டி20 ஃபார்மெட்டில் இத்தனை ஆண்டுகள் சர்வைவ் ஆனதில் மகிழ்ச்சி" என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்