பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஒரு தலைபட்சமாக கருத்துக்களை தெரிவிக்கின்றார், குறிப்பாக ரோகித் சர்மாவை பாராட்டும் அவர் விராட் கோலியை விமர்சனம் செய்கிறார், ஆகவே ஹர்ஷா போக்ளே ரோஹித் ஆதரவாளர், கோலியை வெறுப்பவர் என்று கோலி ரசிகர்கள் போக்ளேயை சாடி வருகின்றனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்து திரில்லரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 173 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா 45 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். பவர் ப்ளேயில் ரோகித் சர்மா அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடினார். இதனால் 6 ஓவர்களில் ஸ்கோர் 68 என்று போட்டிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
பிரமாதமான புல்ஷாட்களை ஆடினார் ரோகித் சர்மா. இவரது ஆட்டத்தைப் பார்த்த வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, “இந்த வடிவத்தில் ரோகித் சர்மா ஆட்டத்தைப் பார்ப்பதே ஒரு தனி குஷிதான். உத்தி ரீதியாக மும்பை சூப்பர்ப். குல்தீப் யாதவ்வையும் விட்டு வைக்கவில்லை, பவர் ப்ளேயில் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடினார்கள்” என்று பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
ஆனால் இதே ஹர்ஷா போக்ளே இதற்கு முந்தைய போட்டியான ஆர்சிபி/லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியில் ஆர்சிபி 212 ரன்களை அடித்தும் தோற்ற போது விராட் கோலி அதிகப் பந்துகளை சாப்பிட்டார், ஒருமுறை விரயம் செய்து விட்டால் அந்தப் பந்துகள் திரும்பிக் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்று ஆர்சிபி ஆட்டம் பற்றி ட்வீட் செய்த ஹர்ஷா, “ஸ்ட்ரைக் ரேட்கள் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அனைத்தையும் இந்தப் போட்டி உறுதி செய்கின்றது. கோலி (44 பந்து 61), ஸ்ட்ரைக் ரேட் 139, ஆனால் கடைசி 15 பந்துகளில் 16 ரன்களையே எடுத்தார். டுபிளெசிஸ் 46 பந்துகளில் 79, ஸ்ட்ரைக் ரேட் 172, ஆனால் ஒருக்கட்டத்தில் இவர் 30 பந்துகளில் 33 ரன்களையே எடுத்திருந்தார். ஆகவே ஸ்ட்ரைக் ரேட்டை வைத்து இன்னிங்ஸை எடை போட முடியாது” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஹர்ஷா போக்ளேவின் இரண்டு ட்வீட்களின் ஸ்க்ரீன் ஷாட்களை எடுத்துப் போட்டு கோலி ரசிகர்கள் போக்ளேயை கோலி விரோதி என்றும் ரோகித் ஆதரவாளர் என்றும் சாடி வருகின்றனர். அதாவது 44 பந்துகளில் 61 விராட் கோலி டெஸ்ட் இன்னிங்ஸ், 45 பந்தில் 65 ரோகித் சர்மா, ஹிட் மேன் இஸ் பேக் என்று கூறியதால் வர்ணனையாளர் எப்படி இரட்டை நாக்கு வைத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் ஹர்ஷா இதற்கும் பதிலடி கொடுத்துள்ளார், அதாவது ரோகித் பற்றிய ட்வீட் போட்ட போது ரோகித் ஆடிக்கொண்டிருந்தார், அவரது ஸ்ட்ரைக் ரேட் அப்போது 200, உங்கள் ஏமாற்றம் புரிகின்றது, ஆனால் என் செயலுக்கான உள்நோக்கம் கற்பிப்பதை வேறு எங்காவது முயற்சி செய்யுங்கள் என்று பதிலளித்துள்ளார் ஹர்ஷா போக்ளே.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago