சென்னை: விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது ஐபிஎல் குறித்த எழுந்த விவாதத்திற்கு அமைச்சர் உதயநிதி அளித்த பதிலில் அதிமுகவை கலாய்த்தார் .
தமிழக சட்டப்பேரவையில், விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், “சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது இல்லை. எனவே, சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் சிஎஸ்கே அணியில் ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. பிற மாநில வீரர்களுக்கே அணியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தமிழகம் சார்பில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அணியாக சிஎஸ்கே அணி விளம்பரப்படுத்தப்பட்டு, பெரும் வர்த்தக லாபத்தை ஈட்டுகிறது. எனவே, தமிழக வீரர்கள் இல்லாத சிஎஸ்கே அணிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்" என்று கூறினார். இந்தக் கோரிக்கைக்கு அரசு தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
தொடர்ந்து அதிமுக கொறடா வேலுமணி விவாதத்தில் பங்கேற்று பேசியபோது, “அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்க எம்எல்ஏக்களுக்குப் பாஸ் வழங்கப்பட்டது. தற்போது 300-400 பாஸ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் கிடைக்கவில்லை" என்று சொன்னதும், சபாநாயகர் அப்பாவு, ’’பாஸ் வேணும்னு கேக்குறீங்க... சட்டசபைக்கான பாஸா’’ எனக் கூறி கலாய்த்தார்.
பதிலுக்கு வேலுமணி, “இல்லை ஐபிஎல் போட்டிக்கான பாஸ் கேட்கிறேன். அதுவும் விளையாட்டுதானே. அதனால்தான் மானியக் கோரிக்கையில் தெரியப்படுத்துகிறேன். எனவே, விளையாட்டுத்துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்” எனப் பேசி அமர்ந்தார்.
» தமிழகத்தில் 400-ஐ தாண்டிய கரோனா பாதிப்பு - ஒருவர் உயிரிழப்பு
» தனுஷின் தந்தை என உரிமை கோரிவந்த முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி
உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலுரையில் பதில் கொடுத்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில், நான்கு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகள் நடக்கவே இல்லையே. அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்குப் பாஸ் கொடுத்தீர்கள் எனத் தெரியவில்லை. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ (BCCI). அதற்கு உங்கள் நெருங்கிய நண்பரான அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாதான் தலைமை பொறுப்பில் உள்ளார்.
நாங்கள் கேட்டால் அவர்கள் பாஸ் தர வாய்ப்பில்லை. நீங்கள் கேட்டால் நிச்சயம் தருவார்கள். எனவே அவரிடம் பேசி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் ஐந்து பாஸ் வாங்கித் தந்தால்கூட போதுமானது. நாங்கள் அதற்கு காசு வேண்டுமானாலும் கொடுக்கிறோம். என் தொகுதியிலுள்ள விளையாட்டு வீரர்களை என் சொந்த காசைக் கொடுத்தே போட்டியைக் காண வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago