டெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனின் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
173 ரன்கள் இலக்கை துரத்திய அந்த அணிக்கு வழக்கம் போல் ரோகித் மற்றும் இஷான் கிஷன் துவக்கம் கொடுத்தனர். கடந்த இரண்டு போட்டிகளாக கிளிக் ஆகாத இந்தக் கூட்டணி, இம்முறை கிளிக் ஆனது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸை துவக்கினர். அதிலும் முதல் 3 ஓவர்களில் இருவரும் சிங்கிள்ஸ் எதுவும் எடுக்காமல் பவுண்டரி, சிக்ஸர்கள் மூலமாக மட்டுமே ரன்களை சேகரித்தனர்.
71 ரன்கள் சேர்த்த இந்தக் கூட்டணி 8வது ஓவரில் பிரிந்தது. வீண் முயற்சியாக ரோகித் செய்த தவற்றால் இஷான் கிஷன் ரன் அவுட் ஆனார். அவர் 31 ரன்கள் எடுத்தார். இதன்பின் திலக் வர்மா ஒன்டவுன் வீரராக களமிறங்கினார். இவரும் ரோகித்தும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முகேஷ் குமார் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்களை விளாசிய திலக் வர்மா, அதே வேகத்தில் அவுட் ஆனார். அவர் 41 ரன்கள் எடுத்திருந்தார். அதற்கடுத்த பந்தில் வந்த வேகத்தில் சூர்யகுமார் யாதவ் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார்.
» IPL 2023: DC vs MI | வார்னரின் கேப்டன் நாக், அக்சரின் ஆக்ரோஷம் - 172 ரன்களுக்கு டெல்லி ஆல் அவுட்
» தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்க: பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை
ஓப்பனிங் இறங்கி அரைசதம் கடந்திருந்த ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்த நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மாவுக்கு இது 41வது அரைசதம். இதன்பின், டிம் டேவிட் மற்றும் கிரீன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன்கள் என்ற நெருக்கடியான நிலையில் டேவிட் இரண்டுகள் ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார்.
டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. டேவிட் வார்னர் உடன் பிரிதிவி ஷா ஓப்பனிங் இறங்கினார். கடந்த மேட்சில் பூஜ்யத்தில் அவுட் ஆன பிரிதிவி இம்முறை 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். மனிஷ் பாண்டேவும் கிடைத்த வாய்ப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. 26 ரன்கள் எடுத்திருந்த அவர், சாவ்லா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.
யஷ் துல் 2 ரன்கள் ரோவ்மென் பவல் 4 ரன்கள், லலித் யாதவ் 2 ரன்கள் என மிடில் ஆர்டரும் கைகொடுக்க தவறினாலும், வார்னர் தனியாளாக போராடினார். இறுதி ஓவர்களில் அக்சர் படேல் அவருக்கு பக்கபலமாக அமைந்தார்.
வார்னர் நிதானத்தை கடைபிடிக்க, அக்சர் ஆக்ரோஷம் காட்டினார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் ரன்கள் விரைவாக உயர்ந்தது. 22 பந்துகளில் அரைசதம் கடத்த அக்சர், அடுத்த இரண்டு பந்துகளில் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதற்கடுத்த இரண்டாவது பந்தே 51 ரன்கள் எடுத்திருந்த வார்னரும் விக்கெட்டை பறிகொடுத்தார். குல்தீப் யாதவ் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார். ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் போரல் 1 கேட்ச் ஆக, குறிப்பிட்ட 19வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்களை இழந்தது டெல்லி அணி.
இறுதியில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது டெல்லி. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் தலா 3 விக்கெட்டும், ரிலே மெரிடித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago