8 அணிகள், 32 போட்டிகள்: ஜூன் 12-ல் துவங்கும் டிஎன்பிஎல்!

By செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 28 போட்டிகள் லீக் போட்டிகளாகும்.

இந்த சீசனின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று ஜூலை 7-ம் தேதியும். இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் முறையாக டிஎன்பிஎல் தொடரில் இந்த சீசனில் டிஆர்எஸ் பயன்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2016 முதல் 6 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி. கடந்த 2022 சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக நாராயண் ஜெகதீசன் (1,240 ரன்கள்) உள்ளார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக சாய் கிஷோர் (85 விக்கெட்டுகள்) உள்ளார். இந்த சீசனில் முதல் முறையாக ஏலம் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற கொண்ட அணிகள் வீரர்களை ஏலத்தில் வாங்கி இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE