சென்னை: ராமசந்திர ஆதித்தன் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் தொடரில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதன் அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.
சென்னை அடையாறில் உள்ள காந்தி நகர் கிளப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சித்தார்த் ராவத், 2-வது இடத்தில் உள்ள ராம்குமார் ராமநாதனுடன் மோதினார். இதில் சித்தார்த் ராவத் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ராம்குமார் ராமநாதனை தோற்கடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சித்தார்த் ராவத், சகநாட்டைச் சேர்ந்த திக்விஜய் பிரதாப் சிங்குடன் மோதுகிறார். போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள திக்விஜய் பிரதாப் சிங் அரை இறுதி சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள மணீஷ் சுரேஷ்குமாரை தோற்கடித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago