வீரமும் காதலும் கலந்த வரிகள் - ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் எப்படி?

By செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘வீரா ராஜ வீர’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் கடந்த மார்ச் 20-ம் தேதி வெளியானது.இளங்கோ கிருஷ்ணன் எழுத்தில், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள ‘வீரா ராஜ வீர’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சங்கர் மகாதேவன், கே.எஸ்.சித்ரா மற்றும் ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் ஜெயம் ரவிக்காக எழுதப்பட்டுள்ளது. சங்க கால வார்த்தைகள் பொருந்திய வரிகளுடன் தொடக்கத்தில் வீரத்தை பறைசாற்றும் பாடல் நடுவில் காதலுக்கான களத்தையும் அமைத்துகொடுத்துள்ளது. பாடலின் நடுவில் வரும் கோரஸூம் ரசிக்க வைக்கிறது. ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் ஜெயம்ரவியின் நடிப்பையும் கதாபாத்திரத்தையும் விரும்பிய ரசிகர்களுக்கு பாடல் இனிமை சேர்த்துள்ளது. வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்