லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 121 ரன்களை சேர்த்துள்ளது.
16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸூம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், அன்மோல்பிரீத் சிங்கும் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 8 ரன்களில் கிளம்ப, ராகுல் திரிபாதி களத்துக்கு வந்து சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அன்மோல்பிரீத் சிங் 31 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த எய்டன் மார்க்ரம் வந்த முதல் பந்திலேயே போல்டாக, அவருக்கு பின் வந்த ஹாரி ப்ரூக் 3 ரன்களில் முடித்துக்கொண்டார்.
நிலைத்து ஆடிய ராகுல் திரிபாதியும் 34 ரன்களில் பெவிலியன் திரும்ப அணியின் ஸ்கோரில் பெரிய அளவில் எந்த முன்னேறமுமின்றி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ரன்களை சேர்த்து பரிதாபமாக விளையாடியது.
» “என் குருநாதரே சேவாக் தான்!” - ஷர்துல் தாக்கூர் நெகிழ்ச்சி
» தாக்கூர் மாதிரி கூட ஆடலையே... இதுதான்டா ஆர்சிபி! - டுபிளெசிஸின் வேடிக்கை கேப்டன்சி
வாஷிங்டன் சுந்தர் 16 ரன்களில் விக்கெட்டாகி பெவிலியன் சென்றடைய, ஆதில் ரஷித் 4 ரன்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த உம்ரான் மாலிக் ரன் எதுவும் எடுக்காமல் அவர்களுடன் ஐக்கியமானார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 121 ரன்களை மட்டுமே சேர்த்தது. அப்துல் சமத் 21 ரன்களுடம், புவனேஸ்குமார் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
லக்னோ ஸ்பின்னர்ஸ் தரப்பில் குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago