குவாஹாட்டி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றிக்கான ஒரு பந்தை விளாசியிருந்தால் போட்டியை வெற்றிகரமாக முடித்திருப்போம் என ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு குவாஹாட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 198 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. துரத்தலின் போது ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினார். எனினும் அவர் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஜெய்ஸ்வாலும் 11 ரன்னில் நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 19 ரன்களும், தேவ்தத் படிக்கல் 26 பந்துகளில் 21 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும் சேர்த்து நேதன் எலிஸ் பந்தில் வெளியேறினர். மட்டையை சுழற்றிய சஞ்சு சாம்சன் 25 பந்துகளில், 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் விளாசிய நிலையில் நேதன் எலிஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து தத்தளித்தது. கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 74 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜுரல் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இதனால் தேவையான ரன் விகிதம் சீராக குறைந்து வந்தது. சாம் கரண் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்களே தேவையாக இருந்த நிலையில் முதல் இரு பந்துகளில் 3 ரன்கள் எடுக்கப்பட்டது. 3-வது பந்தில் ஷிம்ரன் ஹெட்மயர் ரன் அவுட் ஆனார்.
இது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஷிம்ரன் ஹெட்மயர் 18 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் விளாசினார். 3 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. துருவ் ஜுரல் 15 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 2-வது ஆட்டத்தில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது.
பேட்டிங்கின் போது சிறப்பாகவே தொடங்கினோம். பவர்பிளேவையும் சிறப்பாக நிறைவு செய்தோம். நடுஓவர்களில் சில பவுண்டரிகளை எதிர்பார்த்தோம். ஆனால் பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசினர். அங்குதான் ஆட்டத்தின் வேகம் குறைந்ததாக கருதுகிறேன். ரன் ரேட்டில் வீழ்ச்சியை சந்தித்த போதிலும் ஆட்டத்தை நெருக்கமாக கொண்டு சென்றது சிறப்பான விஷயம்.
இறுதியில் ஒரு சிக்ஸரை அடிக்க தவறிவிட்டோம். வெற்றிக்கான ஒரு பந்தை விளாசுவதில் இருந்து விலகிவிட்டோம். பீல்டிங்கின் போது ஜாஸ் பட்லருக்கு கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டிருந்தது. இதற்காக அவர், தையல்கள் போட்டுக்கொண்டிருந்தார். இதற்கு சிறிது நேரத்தை உடற்பயிற்சி நிபுணர் எடுத்துக்கொண்டார். அப்போது போதிய நேரம் இல்லாததால் ரவிச்சந்திரன் அஸ்வினை தொடக்க வீரராக அனுப்பினோம். இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago