சூரிச்: பிபா தரவரிசை பட்டியலில் 6 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி.
அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 6 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் கடந்த மாதம் இறுதியில் மொரோக்கோவிடம் தோல்வி அடைந்த பிரேசில் அணியானது தரவரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிபா உலகக் கோப்பையில் 2-வது இடம் பிடித்துள்ளது பிரான்ஸ். தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை அடைந்துள்ளது அந்த அணி. சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதி சுற்றில் நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி கண்டிருந்தது.
பெல்ஜியம் 4-வது இடத்தில் தொடர்கிறது. இத்தாலி உள்ளிட்ட இரு அணிகளுக்கு எதிராக சமீபத்தில் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. நெதர்லாந்து, குரோஷியா, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய அணிகள் முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.
ஸ்பெயின், போர்ச்சுகலுடன் இணைந்து 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ள மொராக்கோ 11-வது இடத்தில் தொடர்கிறது. அதேவேளையில் 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்த உள்ள அமெரிக்கா 13-வது இடத்திலும், மெக்சிகோ 15-வது இடத்திலும், கனடா 6 இடங்கள் முன்னேறி 47-வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆசிய அணிகளில் ஜப்பான் 20-வது இடத்தை பிடித்துள்ளது. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்திய கத்தார் 61-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து அணி 5 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago