கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 204 ரன்களைச் சேர்த்துள்ளது.
16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க ஆடக்காரர்களாக களமிறங்கினர்.
ஒருபுறம் ரஹ்மானுல்லா நிலைத்து நிற்க மறுபுறமிருந்த வெங்கடேஷ் ஐயர் 3 ரன்களில் போல்டானார். அவருக்கு அடுத்து வந்த மந்தீப் சிங்கும் அடுத்த பாலே போல்டு. நிதிஷ் ராணாவும் 1 ரன்களில் கிளம்ப 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களைச் சேர்த்திருந்தது கொல்கத்தா.
44 பந்துகளில் 57 ரன்களை குவித்த ரஹ்மானுல்லாவை கரண் சர்மா அவுட்டாக்க, அடுத்து வந்த ரஸல் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியின் திரும்பினார். பேட்ஸ்மேன்களில் சொதப்பலால் தட்டு தடுமாறி 17 ஓவர்களில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 160 ரன்கள் வரை சேர்த்தது கொல்கத்தா. அதுவரை அவுட்டான வீரர்களுக்கும் சேர்த்து அடுத்து வந்த ஷர்துல் தாக்கூரும் ரின்கு சிங்கும் இணைந்து 50 பந்துகளில் 103 ரன்கள் பாட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி காட்டினர்.
33 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்த ரின்கு சிங்கை ஹர்ஷல் படேல் விக்கெட்டாக்கினார். அவர் சென்ற வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பெவிலியன் சென்றாலும், 29 பந்துகளில் 68 ரன்களை குவித்து அணிக்கு கடைசிக் கட்டத்தில் மிகப்பெரிய பலமாக திகழ்ந்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 204 ரன்களைச் சேர்த்தது. சுனில் நரைன் ரன் எதுவும் எடுக்காமலும், உமேஷ் யாதவ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
ஆர்சிபி அணி தரப்பில் டேவிட் வில்லி 2, கரண் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்ஷல் படேல், மைக்கேல் ப்ரேஸ் வெல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago