IPL | நாட்டில் அதிகரித்து வரும் கரோனா: எச்சரிக்கையாக இருக்க பிசிசிஐ அறிவுறுத்தல்?

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 10 ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடப்பு ஐபிஎல் சீசனில் 10 அணிகளும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விளையாடி வருகின்றன. இந்தச் சூழலில் அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 5,335 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் 25,587 பேர் தொற்று பாதிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுகின்றன. கரோனா தொற்று காரணமாக கடந்த சில ஐபிஎல் சீசன்கள் பயோ - பபூள் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE